தமிழக செய்திகள்

விவாகரத்து மனுவை திரும்பப் பெற்றார் முதலமைச்சர் மனைவி சங்கீதா!

மனு வாபஸ் பெறப்பட்டதையடுத்து வழக்கை முடித்து வைப்பதாக செங்கல்பட்டு குடும்பநல நீதிமன்றம் அறிவிப்பு.

தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்க்கு எதிராக அவரது மனைவி சங்கீதா தாக்கல் செய்திருந்த விவாகரத்து மனுவை திரும்பப் பெற்றுள்ளார்.

மனு திரும்பப் பெறப்பட்டதைத் தொடர்ந்து வழக்கு முடித்து வைக்கப்படுவதாக செங்கல்பட்டு குடும்பநல நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இன்று இந்த விவாகரத்து வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில் முதலமைச்சர் விஜய் தரப்பில் ஆஜராக விலக்கு கோரப்பட்டது. ஆனால் நீதிமன்றம், சட்டசபை கூட்டத்தொடர் முடிந்தபின்பு ஆஜராக கோரியிருந்தது. பின்னர் விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில் தற்போது மனுவை திரும்பப் பெற்றுள்ளார் சங்கீதா.

விவாகரத்து

நடிகர் விஜய் பிரபல மூன்று எழுத்து நடிகை ஒருவருடன் உறவில் இருப்பதாகவும், இதனால் தன்னை மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் நீண்டநாட்களாக ஒதுக்கி வந்ததாகவும் குற்றம்சாட்டி அவரின் மனைவி சங்கீதா விவாகரத்துக் கோரி மனுத்தாக்கல் செய்திருந்தார்.

கடந்த 2021-ல் இருந்து இந்த பிரச்னை நிலவி வந்ததாகவும் தனது விவாகரத்து மனுவில் குறிப்பிட்டிருந்தார். இது தமிழ்நாடு அரசியல் மற்றும் சினிமாத்துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் தனது மனுவை திரும்பப் பெற்றுள்ளார் சங்கீதா.