தமிழக செய்திகள்

முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம்: ஒப்பந்தம் 3 மாதம் நீட்டிப்பு

3 மாத காலத்திற்குள் புதிய ஒப்பந்ததாரரை தேர்வு செய்வதற்கான டெண்டரை வெளியிட நடவடிக்கை.

முதலமைச்சரின் காலை உணவு திட்டத்திற்கான 3 ஆண்டு கால ஒப்பந்தம் முடிவடைந்த நிலையில், ஒப்பந்தத்தை 3 மாதங்கள் நீட்டித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்த காலத்தில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் பல ஒப்பந்ததாரர்களின் ஒப்பந்தம் முடிவடைந்தது.

3 மாத காலத்திற்குள் புதிய ஒப்பந்ததாரரை தேர்வு செய்வதற்கான டெண்டரை வெளியிட நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

அதாவது, 3 மாத காலத்திற்குள் டெண்டர் வெளியிட்டு புதிய ஒப்பந்ததாரர்களை தேர்வு செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.