தமிழக செய்திகள்

"முழு அதிகாரமில்லாத முதல்வர்..!"- நெல்லையில் த.வெ.க தலைவர் விஜய் பரபரப்பு பேச்சு

நேரடி கூட்டணிக்கும், மறைமுக கூட்டணிக்கும் நம்ம மேல செம காண்டில் உள்ளனர் என்று விஜய் கூறியுள்ளார்.

நெல்லை கே.டி.சி நகரில் நடைபெறும் பிரச்சாரக் கூட்டத்தில் தவெக தலைவர் விஜய் உரையாற்றி வருகிறார்.

அப்போது அவர் பேசியதாவது:-

என் நெஞ்சில் குடியிருக்கும் திருநெல்வேலி மக்களுக்கு வணக்கம்.

முழு அதிகாரமில்லாத முதல்வராக மு.க.ஸ்டாலின் இருப்பதால் நெல்லையில் நிகழ்ச்சி நடத்த முடிந்திருக்கிறது.

திமுக கூட்டணி, பாஜக கூட்டணி இரண்டும் வேறு வேறு என காட்டிக்கொண்டாலும் உள்ளுக்குள் ஒன்று தான்.

திமுக, பாஜக இருவரின் நோக்கமும் ஒன்று தான், உங்களுக்காக குரல் கொடுக்கும் விஜய் வந்துவிடக்கூடாது என்பது தான்.

ஊழல் செய்ய முடியாத சூழல் உருவாகி உள்ளதால் என் மீது 2 கூட்டணியும் செம கோபத்தில் உள்ளனர்.

கல்லாப்பெட்டி கூட்டணி கலகலத்துபோய் உள்ளது. ஒட்டுப்போட்டு கூட்டணியை தக்க வைத்துக்கொண்டது திமுக.

நேரடி கூட்டணிக்கும் மறைமுக கூட்டணிக்கும் நம்ம மேல காண்டு. அவங்க வீட்டிலேயே அவங்க குடும்பத்திலேயே விசில் சத்தம் பலமாக கேட்பதால் செம காண்டில் உள்ளனர்.

சில பல கோடிகளை கொடுத்து தமிழக காங்கிரசை தக்க வைத்து கொண்டாலும் உண்மையான காங்கிரஸ் நம்மிடம் தான் உள்ளது.

33 ஆண்டுகளாக ஒவ்வொரு வீட்டுக்குள்ளும் ஒவ்வொரு மனதிலும் நுழைய நான் பட்ட பாடு எனக்கு தான் தெரியும்.

கட்சி ஆரம்பித்து ஒவ்வொரு குடும்பத்திற்குள் நான் நுழையவில்லை, அதற்கு முன்பே நான் நுழைந்துவிட்டேன்.

எனக்கு ஒன்னுன்னா மக்களுக்கும், மக்களுக்கு ஒன்னுன்னா எனக்கும் கண்ணு கலங்கும்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.