மாமல்லபுரத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தவெக எம்எல்ஏக்களுடன் முதலமைச்சர் விஜய் ஆலோசனையை தொங்கினார்.
முதலமைச்சர் விஜய் தலைமையில் நடைபெற்று வரும் இந்த ஆலோசனை கூட்டத்தில், கட்சியின் பொதுச்செயலாளரும் அமைச்சருமான என்.ஆனந்த் மற்றும் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் பங்கேற்றுள்ளனர்.
இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களுக்கு முதலமைச்சர் விஜய் பல்வேறு அறிவுரைகளை வழங்குவதுடன் சில அமைச்சர்கள் மற்றும் சில எம்.எல்.ஏ.க்களுக்கு கடுமையான எச்சரிக்கை விடுக்க இருப்பதாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில், சென்னை மாமல்லபுரம் நட்சத்திர விடுதியில் நடைபெற்ற கூட்டத்தில் இருந்து தவெக பெண் எம்எல்ஏக்கள் மட்டும் புறப்பட்டனர்.
கூட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் பெண் எம்எல்ஏக்கள் மட்டும் புறப்பட்டனர். முதலில் பெண் எம்எல்ஏக்களிடம் முதலமைச்சர் விஜய் ஆலோசனை நடத்திய நிலையில் அவர்கள் புறப்பட்டனர்.
எம்எல்ஏக்கள் காமாட்சி, சிந்து, தாகிரா, கனிமொழி, குழந்தை ராணி உள்ளிட்டோர் புறப்பட்டனர்.
மாமல்லபுரத்தில் எம்எல்ஏக்களை முதலமைச்சர் விஜய் தனித்தனியே சந்தித்து வருகிறார். முதலமைச்சருடனான சந்திப்பிற்கு பிறகு எம்எல்ஏக்கள் திரும்பிச் செல்கின்றனர்.
கூட்டத்தின்போது, அனைவரும் ஒற்றுமையாக இருந்து மக்களுக்கான சேவையை தொடர்ந்து செய்ய வேண்டும் என தவெக எம்எல்ஏக்களுக்கு முதலைமைச்சர் விஜய் அறிவுறுத்தியுள்ளார்.
மேலும், எதிர்க்கட்சிகளின் டிராப்-ல் மாட்டிக்கொள்ளாதீர்கள். நம் கூட்டணியில் உள்ளவர்களை தவிர நமக்கு எதிர்க்கட்சிகள் அதிகமாக உள்ளது. எனவே நமக்கு நிறைய எதிரிகள் என்பதால் எந்த டிராப்-ல் சிக்கிக்கொள்ளாதீர்கள். தொடர்ந்து மக்கள் சேவையில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும்.
நாம் கொண்டு வரும் மக்கள் நல திட்டங்களை மக்களுக்கு கொண்டு செல்வதில் கவனம் செலுத்துங்கள் என தவெக எம்எல்ஏக்களுக்கு முதலமைச்சர் விஜய் அறிவுரை வழங்கியதாக கூறப்படுகிறது.
மேலும், தங்கள் தொகுதி குறைகளை தெரிவித்த தவெக எமஎல்ஏக்களிடம் சரிசெய்து தரப்படும் என முதலமைச்சர் உறுதி அளித்துள்ளார். எம்எல்ஏக்கள் விடுத்த கோரிக்கைகளில் சிலவற்றை குறித்துக் கொட முதலமைச்சர் விஜய் செய்து கொடுப்பதாக வாக்குறுதி அளித்துள்ளார்.