தமிழக செய்திகள்

அமைச்சர்கள் பொறுப்பேற்பு- புஸ்சி ஆனந்த், செங்கோட்டையனை நாற்காலியில் அமர வைத்த முதலமைச்சர் விஜய்

அமைச்சர் ஆதவ் அர்ஜூனா பொதுப்பணித்துறை, விளையாட்டுத்துறை அமைச்சராக பொறுப்பேற்று பணிகளை கவனிக்கத் தொடங்கினார்.

தமிழக வெற்றிக்கழகம் தலைமையிலான அரசு கடந்த 10-ந்தேதி பதவியேற்றுக்கொண்டது. முதலமைச்சராக ஜோசப் விஜய் பதவியேற்றுக்கொண்டார். அவரது தலைமையில் 9 அமைச்சர்கள் பதவியேற்றுக்கொண்டனர்.

இதனை தொடர்ந்து அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்கப்படாமல் இருந்த நிலையில் கடந்த வாரம் இலாகாக்கள் ஒதுக்கப்பட்டது. அதனை தொடர்ந்து இன்று அமைச்சர்கள் தலைமைச் செயலகத்தில் தங்களது அறைகளில் பொறுப்பேற்றுக்கொண்டனர்.

அந்த வகையில், அமைச்சர் ஆதவ் அர்ஜூனா பொதுப்பணித்துறை, விளையாட்டுத்துறை அமைச்சராக பொறுப்பேற்று பணிகளை கவனிக்கத் தொடங்கினார்.

ஆதவ் அர்ஜூனாவை தொடர்ந்து, பொதுப்பணித்துறை அமைச்சராக செங்கோட்டையனும் பொறுப்பேற்றுக்கொண்டார். செங்கோட்டையன் பொறுப்பேற்றுக்கொண்ட போது முதலமைச்சர் ஜோசப் விஜய் நேரில் வந்து வாழ்த்து தெரிவித்தார்.

அமைச்சர் புஸ்சி ஆனந்த் ஊரக வளர்ச்சி, நீர்ப்பாசனத்துறை அமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்டார். அப்போது முதலமைச்சர் விஜய் நேரில் வந்து அமைச்சர் ஆனந்தை இருக்கையில் அமரவைத்தார்.

சுகாதாரத்துறை அமைச்சராக அருண்ராஜ், உணவுத்துறை அமைச்சராக வெங்கட் ரமணன், மின்சாரம் மற்றும் சட்டத்துறை அமைச்சராக நிர்மல் குமார், பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக அமைச்சர் ராஜ்மோகன், கனிம வளத்துறை அமைச்சராக டி.கே.பிரபு, தொழில்துறை அமைச்சராக கீர்த்தனா ஆகியோர் இன்று அவரவர் அறைகளில் பொறுப்பேற்றுக்கொண்டு பணிகளை மேற்கொண்டனர்.

பொறுப்பேற்றுக் கொண்ட அமைச்சர்களுக்கு துறை சார்ந்த அதிகாரிகள் நேரில் வந்து வாழ்த்து தெரிவித்துக் கொண்டனர்.