தமிழக செய்திகள்

'1967, 1977-ஐப் போல சாமான்ய மக்களுக்கான ஆட்சி'-முதல்வர் விஜய் பிரகடனம்!

"நாங்கள் ஏதோ கூட்டத்தில் இருந்து நேரடியாக வந்து முதலமைச்சர் ஆகிவிடவில்லை"

தமிழகத்தில் புதிய அரசை அமைத்துள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் முதலாவது சட்டமன்றக் கூட்டத்தொடர், ஆளும் தவெக மற்றும் எதிர்க்கட்சியான திமுக இடையே கடுமையான விவாதக் களமாக மாறியுள்ளது. சட்டமன்ற அவையில் எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்குப் பதிலளித்து முதலமைச்சர் விஜய் ஆற்றிய உரையின் முக்கிய விவரங்கள்

வரலாற்று ஆட்சிகளுடன் ஒப்பீடு:

தமிழக அரசியல் வரலாற்றில் மிகப்பெரிய திருப்பங்களை ஏற்படுத்திய 1967 (அண்ணா தலைமையிலான ஆட்சி) மற்றும் 1977 (எம்.ஜி.ஆர் தலைமையிலான ஆட்சி) ஆகிய காலகட்டங்களைப் போல, தற்பொழுது அமைந்துள்ள தவெக ஆட்சியும் "முற்றிலும் சாமான்ய மக்களுக்கான ஒரு ஆட்சி" என்று முதலமைச்சர் விஜய் பேரவையில் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.

விமர்சனங்களுக்குப் பதிலடி:

தான் நேரடியாக முதலமைச்சர் நாற்காலியில் அமர்ந்துவிட்டதாகக் விமர்சிப்பவர்களுக்குப் பதிலளித்த அவர், "நாங்கள் ஏதோ கூட்டத்தில் இருந்து நேரடியாக வந்து முதலமைச்சர் ஆகிவிடவில்லை... கடுமையான உழைப்பிற்குப் பிறகுதான் இந்த இடத்திற்கு மேலே வந்துள்ளோம்" எனத் திட்டவட்டமாக முழங்கினார்.

கொள்கை மற்றும் மக்கள் நலன்:

அரசியல் ரீதியாகக் கட்சிகளுக்குள் கொள்கை வேறுபாடுகள் மற்றும் முரண்பாடுகள் இருந்தாலும், மக்கள் நலனுக்காக தவெக அரசு சின்சியராகவும், முழு வீச்சிலும் தொடர்ந்து உழைக்கும் என உறுதியளித்தார்.

SCROLL FOR NEXT