தமிழக செய்திகள்

தேவா உடலுக்கு முதலமைச்சர் விஜய் நேரில் அஞ்சலி

தேவாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய முதலமைச்சர் விஜய் ஸ்ரீகாந் தேவா உள்பட அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

தேனிசை தென்றல் தேவா இன்று திடீர் மாரடைப்பு காரணமாக சென்னையில் உயிரிழந்தார்.சினிமாவில் 'கானா' இசையை முக்கிய நீரோட்டத்திற்குக் கொண்டு வந்தவர். அண்ணாமலை, பாட்ஷா, ஆசை, காதல் கோட்டை, வாலி, குஷி உள்ளிட்ட 400-க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

முதலமைச்சர் நேரில் அஞ்சலி

சென்னை தியாகராய நகர் இல்லத்தில் தேனிசை தென்றல் தேவாவின் உடலுக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி செலுத்தினார். தேவாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய முதல்வர் விஜய். ஸ்ரீகாந் தேவா உள்பட அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

தமிழ்த் திரையுலகின் தனித்துவமான இசையமைப்பாளரும், கானா பாடல்களால் எளிய மக்களின் மனங்களைக் கவர்ந்தவருமான 'தேனிசைத் தென்றல். தேவா அவர்கள் மறைந்த செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சியும், ஆழ்ந்த வேதனையும் அடைந்தேன். என்று சமூகவலைதள பதிவில் குறிப்பிட்டிருந்தார்

மேலும் தேவாவின் உடலுக்கு முழு அரசுமரியாதையுடன் இறுதிசடங்கு வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது.

இந்த நிலையில் தேவாவின் உடல் நாளை ராணிப்பேட்டை ஆற்காடு அருகே உள்ள மாங்காடு கிராமத்தில் தேவாவின் உடல் அடக்கம் செய்யப்பட உள்ளது

SCROLL FOR NEXT