தமிழக செய்திகள்

வி.எஸ். பாபுவின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார் முதலமைச்சர் விஜய்!

கடந்த 2006-ஆம் ஆண்டு திமுக சார்பில் போட்டியிட்டு முதல்முறையாகச் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பெரம்பூரில் வைக்கப்பட்டுள்ள கொளத்தூர் தொகுதியின் தவெக சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ். பாபுவின் உடலுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். தனது கையை பிடித்து அழுத அவரது குடும்பத்தினருக்கும் ஆறுதல் தெரிவித்தார்.

முன்னதாக, அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, செங்கோட்டையன், நிர்மல் குமார், ராஜீவ் அஞ்சலி செலுத்தினார்.

மறைவு

சுவாசக் கோளாறு காரணமாகச் சென்னையில் உள்ள எம்.ஜி.எம். ஹெல்த்கேர் மருத்துவமனையில் கடந்த செப்டம்பர் 9 அன்று வி.எஸ். பாபு அனுமதிக்கப்பட்டார்.

சுமார் 72 நாட்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், மாரடைப்பு ஏற்பட்டு இன்று பிற்பகல் 2:24 மணியளவில் காலமானார்.

75 வயதான வி.எஸ். பாபு, கடந்த 2006-ஆம் ஆண்டு திமுக சார்பில் போட்டியிட்டு முதல்முறையாகச் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் அதிமுகவில் இணைந்து செயல்பட்ட அவர், 2026-ஆம் ஆண்டு தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார்.

SCROLL FOR NEXT