முதலமைச்சர் விஜய் நேற்று டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடந்த நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்றார். இந்த கூட்டத்தை முடித்த பிறகு டெல்லியில் தங்கி இருந்த விஜய், இன்று கர்நாடக மாநிலம் உடுப்பியில் உள்ள பிரசித்தி பெற்ற கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்.
இதற்காக டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் முதலமைச்சர் விஜய் இன்று மதியம் கர்நாடக மாநிலம் மங்களூர் புறப்பட்டார். மங்களூர் விமான நிலையத்தில் வந்திறங்கிய அவர், அங்கிருந்து 140 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு காரில் சென்றார். அங்கு அவர் சாமி தரிசனம் செய்தார். கோவில் நிர்வாகம் சார்பில் அவருக்கு பூரண கும்ப மரியாதை வழங்கப்பட்டது.
இந்நிலையில், கொல்லூர் மூகாம்பிகை கோவிலில் சாமி தரிசனம் செய்த முதலமைச்சர் விஜய் வெள்ளி வாள் ஒன்றை காணிக்கையாக அளித்துள்ளார்.
2.5 அடி நீளமுள்ள வெள்ளி வாளை முதலமைச்சர் விஜய் கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு காணிக்கையாக வழங்கி உள்ளார்.
எம்ஜிஆர் முதல்வராக இருந்தபோது மூகாம்பிகை தாயாருக்கு 2.5 அடி தங்க வாள் வழங்கிய நிலையில் முதலமைச்சர் விஜய் வெள்ளி வாள் காணிக்கையாக வழங்கியுள்ளார்.