முதலீட்டாளர்களுடனான சந்திப்பை தொடர்ந்து இன்று மாலை லண்டன் வாழ் தமிழர்களை முதலமைச்சர் விஜய் சந்திக்க உள்ளார்.
தமிழகத்திற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் விஜய் லண்டன் சென்றுள்ளார். அங்கு நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை அவர் தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியை முடித்த பிறகு லண்டனில் முதலமைச்சர் விஜய் முன்னிலையில் பல்வேறு நிறுவனங்கள் தமிழகத்தில் முதலீடு செய்யவும், தொழிலை விரிவாக்கம் செய்யவும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அங்கு சுமார் ரூ.12ஆயிரத்து 300 கோடி அளவுக்கு தொழில் முதலீடுகள், முதலமைச்சர் விஜய் முன்னிலையில் ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. இதன் மூலம் 10 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த முதலீட்டாளர்களுடனான சந்திப்பை தொடர்ந்து இன்று மாலை லண்டன் வாழ் தமிழர்களை முதலமைச்சர் விஜய் சந்திக்க உள்ளார்.
முறையான சந்திப்பு 15ஆம் தேதி இருக்கும் என தெரிவித்திருந்த நிலையில் நேற்று லண்டனில் உள்ள ரசிகர்களை அவர் தங்கியுள்ள தி ஷார்ட் நட்சத்திர விடுதியில் சந்தித்து புகைப்படம் எடுத்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து இன்று லண்டன் வாழ் தமிழர்களை அவர் சந்திக்கிறார். இதற்கான ஏற்பாடுகள் அங்கு விரிவாக செய்யப்பட்டு வருகிறது.