தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் கடந்த மாதம் 10-ந்தேதி தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவி ஏற்றுக்கொண்டார். நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் விஜய், தான் போட்டியிட்ட சென்னை பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதிகளிலும் வெற்றி பெற்றதால் திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார்.
இந்நிலையில் தனக்கு வாக்களித்த திருச்சி கிழக்கு தொகுதி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக முதலமைச்சர் விஜய் இன்று (திங்கட்கிழமை) மாலை 2.30 மணி அளவில் தனி விமானம் மூலம் திருச்சிக்கு வந்தடைந்தார்.
திருச்சிக்கு வருகை தந்த முதலமைச்சர் விஜய்க்கு அரசு சார்பிலும், காவல்துறை சார்பிலும் வரவேற்பு அளிக்கப்பட்டது.
திருச்சியில் காவல்துறையின் மரியாதையை முதலமைச்சர் விஜய் ஏற்றுக்கொண்டார்.
திருச்சிக்கு வருகை தந்த முதலமைச்சர் விஜய்க்கு மதிமுக எம்.பி.துரை வைகோ சால்வை அணிவித்து வரவேற்றார்.
அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, ரமேஷ், துணை சபாநாயகர் உள்ளிட்டோர் முதலமைச்சர் விஜயை பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
வரவேற்பு முடிந்த பின்னர் முதலமைச்சர் தனது பிரத்யேக வாகனத்தின் மூலம் நன்றி அறிவிப்பு பொதுக்கூட்டம் நடைபெற உள்ள செயின்ட் ஜோசப் கல்லூரிக்கு சென்றார்.
செயின்ட் ஜோசப் கல்லூரி மைதானத்தில் முதலமைச்சர் விஜய் பேச உள்ள இடத்தில் பொதுமக்கள் அமர்வதற்காக பிரமாண்ட பந்தல் அமைக்கப்பட்டு உள்ளது. விஜய் முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகான முதல் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி இதுவாகும்.
திருச்சி விமான நிலையத்தில் இருந்து நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு செல்லும் முதலமைச்சர் விஜய்க்கு வழி நெடுக உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
செயின்ட் ஜோசப் கல்லூரி மைதானத்தில் முதலமைச்சர் விஜய் பேச உள்ள இடத்தில் பொதுமக்கள் அமர்வதற்காக பிரமாண்ட பந்தல் அமைக்கப்பட்டு உள்ளது. அங்கு, முதலமைச்சர் விஜயை கண்டதும் தொண்டர்கள் கூட்டம் ஆர்ப்பரித்தனர்.
இந்நிலையில், முதலமைச்சரின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் தமிழுக்கு முதலிடம் வழங்கும் வகையில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது.
நெஞ்சில் குடியிருக்கும் தமிழக மக்கள் குறிப்பாக திருச்சி கிழக்கு தொகுதி மக்களுக்கு எனது ஸ்பெஷல் வணக்கம். என்னை இப்போது பெரம்பூர் தொகுதி எம்எல்ஏ என்றுதான் சொல்வார்கள். தமிழகத்திற்கு எப்படி திருச்சி இதயம் மாறியோ, அதுபோல் திருச்சி கிழக்கு தொகுதி எனது கண் இமை மாதிரி.
இதுவரை உங்களை ஏமாற்றியவர்களை மாற்றி, இந்த விஜயை முதலமைச்சராக, முதல் சேவகராக மாற்றி இருக்கிறீர்கள். அத்தனை பேருக்கும் தலைவணங்கி நன்றி தெரிவிக்கிறேன்.
ஆட்சிக்கு வந்து 6 மாதம் அமைதியாக இருப்போம் என்றவர்கள், 6 நாள் கூட அமைதியாக இல்லை. எங்கு புலம்புவது எனத்தெரியாமல் திருமண நிகழ்ச்சியில் கூட சென்று புலம்புகிறார்கள். அதிமுகவும், திமுகவும் சேர்ந்து நம்மை ஆட்சியமைக்க விமாடல் தடுக்க முயன்றனர்.
அதிகாரம் பண்றவங்களும், ஆதிக்கம் செலுத்துறவங்களும் தான் கோட் சூட் போடணுமா? நம்மலாம் கோட் சூட் போடக் கூடாதா? அப்படிலா எதுவுமே கிடையாது.
நான் என்ன கலர் கலராவா போட்டுட்டு வர்றேன்.. ரெண்டே ரெண்டு கலர்தான். Black & White. எல்லாத்துலயும் இந்த விஜய் Black & White ஆக இருப்பான் என்பதை காட்டத்தான் இந்த கலர்.
அந்த பிளாக் கூட யாரை குறிக்கும் எதை குறிக்கும் என்பது உங்களுக்கே தெரியும்.
அரசியல் புரிதல் இல்லாம, கவர்ச்சியில் மயங்கி மக்கள் நமக்கு வாக்களித்துவிட்டார்கள் என்று சொல்றாங்க. முன்பு ரீல்ஸ் பார்த்தவர்கள் எல்லாம் இப்போது நியூஸ் பார்க்கிறார்கள். சட்டமன்றத்தில் நடப்பதை இப்போது அனைவரும் பார்க்கும் நிலையை உண்டாக்கியுள்ளோம்.
தற்குறி, தற்குறி என்றவர்கள்தான் உங்கள் வாழ்க்கையை இப்போது கேள்விக்குறியாக்கி உள்ளனர். இதே மக்கள் தானே இத்தனை வருஷமா உங்களுக்கு ஓட்டு போட்டுக்கிட்டு இருந்தாங்க. உங்களுக்கு மட்டும் வேற ஏதாச்சும் பிளானட்டில் இருந்து வந்து ஓட்டு போட்டாங்களா?
நீங்கள் மக்களை தப்பாக பேசினால், இந்த விஜய் கேள்வி கேட்பான், சும்மா இருக்க மாட்டான். உங்களுக்கு ஓட்டு போட்டால் நல்லவர்கள், எங்களுக்கு ஓட்டு போட்டால் தற்குறிகளா?
அதிகபட்சமாக எல்லா கூட்டங்களிலும் 20 நிமிடம்தான் பேசுவேன். மக்கள் என்னை பார்த்து மக்களுக்கு உழைப்பதை நீங்கள் பாருங்கள். எனக்கு எதிரிகள் இல்லையா. இரண்டு பேர் இடையே தான் போட்டி. த.வெ.க. - தி.மு.க. இடையேதான் போட்டி. வேறு யாருக்கும் இடையில் வேலையே இல்லை.
தி.மு.க.வும், மற்றும் பலரும் சேர்ந்து கடைசி 5 நாட்களில் ஆட்சியமைக்க ஒரு கூத்து நடத்தினார்கள். எதிர்காலம் எப்படி இருக்கும், தி.மு.க. நம்மை எதிர்க்க எதிர்க்க அத்தனையும் நமக்கு நன்மையே.
அதிகபட்சமாக எல்லா கூட்டங்களிலும் 20 நிமிடம்தான் பேசுவேன். மக்கள் என்னை பார்த்து மக்களுக்கு உழைப்பதை நீங்கள் பாருங்கள். எனக்கு எதிரிகள் இல்லையா. இரண்டு பேர் இடையே தான் போட்டி. த.வெ.க. - தி.மு.க. இடையேதான் போட்டி. வேறு யாருக்கும் இடையில் வேலையே இல்லை.
திமுகவின் தோல்விக்கு காரணம் தேடுகிறார் ஸ்டாலின், உங்கள் குடும்பம் தான் காரணம் என தொண்டர்கள் கூறுவது கேட்கவில்லையா? திமுக நடத்தும் குடும்ப அரசியல் தான் தோல்விக்கு காரணம் என ஒவ்வொரு திமுக தொண்டரும் கூறுகிறார்கள்.
வீதிக்கு வீதி போதைப்பொருள் கலாச்சாரத்தை வளர்த்துவிட்ட திமுக இன்று எங்களை குறைகூறுவதா? போதைப்பொருள் கலாச்சாரத்தால் வன்முறை அதிகரித்தால் அதற்கு எங்கள் மீது பழி போடுவதா?
இந்த பூர்வ ஜென்ம பந்தத்தை யாராலும் கெடுக்க முடியாது. மக்களையும், எங்களையும் பிரிக்க நினைத்தால் ஒரு காலத்திலும் நடக்காது. ஆக்கப்பூர்வ எதிர்க்கட்சியாக இருந்து பாருங்கள்.
நாங்கள் 200 யூனிட் இலவசம் என்று அறிவித்தோம். முதல் 100 யூனிட் ஜெயலலிதா கொடுத்தது. இன்றைக்கு டாஸ்மாக் கடைகள் அடைப்பு. விவசாய கடன் தள்ளுபடியை முடிந்த அளவு செய்தேன்.
திமுக இப்போ தீய சக்தி மட்டும் இல்ல, தூர சக்தி, ஓர சக்தி, கோர சக்தி, பார சக்தி.. தீா்ந்து போன சக்தியுடன் இணைந்து ஆட்சியமைக்க முயன்ற திமுக தீய்ந்து போன சக்தியாக மாறிவிட்டது.
நம்மை விமர்சிப்பதாக நினைத்துக்கொண்டு அவர்களே ஆப்பு வைத்துக்கொள்கிறார்கள்.
ஊழலற்ற ஆட்சியை கொண்டு வருவோம், தவெக வெல்லாத தொகுதியும் நமது தொகுதிதான்.