ஆசிய விளையாட்டில் பதக்கம் வெற்ற தமிழக வீரர், வீராங்கனைகளுக்கு முதலமைச்சர் விஜய் விரைவில் விருந்து அளிக்க உள்ளதாக அமைச்சர் ஆதவ் அர்ஜூனா கூறியுள்ளார்.
ஜப்பானில் 16 நாட்கள் நடைபெற்ற ஆசிய விளையாட்டு கொண்டாட்டம் நேற்று கோலாகலமாக நிறைவு பெற்றது. இந்த விளையாட்டு போட்டியில் இந்தியா 85 பதக்கங்களுடன் 4-வது இடத்தை பிடித்தது. இதனை தொடர்ந்து பதக்கங்களை வென்ற வீரர்களுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், ஆசிய விளையாட்டு போட்டியில் பங்கேற்ற பதக்கங்களை வென்ற வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு சென்னை நேரு ஸ்டேடியத்தில் பாராட்டு விழா நடைபெற்றது. இதில் பங்கேற்ற அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, ஆசியப் போட்டிகளில் பதக்கம் வென்ற தமிழக வீரர்களின் சாதனைகளை பாராட்டியதுடன், தமிழ்நாடு அரசின் சார்பில் உயரிய ஊக்கத்தொகைகள் மற்றும் சிறப்பு நிதி உதவிகள் வழங்கப்படும். தமிழகத்தைச் சேர்ந்த வீரர்கள் தடகளம், ஸ்குவாஷ் மற்றும் பிற போட்டிகளில் கலந்துகொண்டு தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களை வென்று தமிழகத்திற்குப் பெருமை சேர்த்துள்ளனர் என்றார்.
மேலும் அவர் கூறியதாவது:-
பதக்கம் வெற்ற தமிழக வீரர், வீராங்கனைகளுக்கு முதலமைச்சர் விஜய் விரைவில் விருந்தளித்து கௌரவிக்க உள்ளார். விளையாட்டு மாணவர்களுக்கான விடுதிகளில் ஏசி வசதி, 38 மாவட்டங்களிலும் விடுதிகள் அமைக்கப்படுகின்றன என கூறினார்.