மாமண்டூரில் பிரசாரத்தை தொடங்கிய முதலமைச்சர் விஜய் கிராமம் கிராமமாக சென்று மக்களை சந்தித்து விசில் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.
மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தலில் மதசார்பற்ற சமூக நீதி வெற்றிக் கூட்டணி சார்பில் த.வெ.க. வேட்பாளராக மரகதம் குமரவேல் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், கூட்டணி கட்சி தலைவர்கள் மற்றும் த.வெ.க.வினர் தீவிர பிரசாரம் செய்து வருகின்றனர்.
த.வெ.க. வேட்பாளர் மரகதம் குமரவேலை ஆதரித்து த.வெ.க. தலைவரும் முதலமைச்சருமான விஜய் கடந்த 25-ந்தேதி நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பங்கேற்று பேசினார்.
இந்நிலையில் மதுராந்தகம் தொகுதி த.வெ.க. வேட்பாளர் மரகதம் குமரவேலுவை ஆதரித்து 2-வது முறையாக இன்று முதலமைச்சர் விஜய் மதுராந்தகத்தில் பிரமாண்ட ‘ரோடுஷோ’ நடத்தி வருகிறார்.
இன்று பிற்பகல் தொகுதிக்குட்பட்ட மாமண்டூரில் பிரசாரத்தை தொடங்கிய முதலமைச்சர் விஜய் கிராமம் கிராமமாக சென்று மக்களை சந்தித்து விசில் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.