தமிழக செய்திகள்

All is Well.. Confident ah irunga.. குழந்தைகள் தின வாழ்த்து அட்டையுடன் கேக் வழங்கினார் முதலமைச்சர் விஜய்!

கொளத்தூர் தொகுதிக்குட்பட்ட சென்னை நடுநிலைப் பள்ளியில் நடைபெறும் குழந்தைகள் தின விழாவில் முதலமைச்சர் விஜய் பங்கேற்பு.

குழந்தைகள் தினத்தை முன்னிட்டு கொளத்தூரில் உள்ள அரசுப் பள்ளியில், மாணவ மாணவிகளுக்கு முதலமைச்சர் விஜய் வாழ்த்து அட்டையுடன் கேக் வழங்கினார்.

குழந்தைகள் தினத்தை ஒட்டி அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் குழந்தைகள் தின வாழ்த்துகளுடன் கேக் வழங்கப்படுகிறது.

இதை முன்னிட்டு, கொளத்தூர் தொகுதிக்குட்பட்ட சென்னை நடுநிலைப் பள்ளியில் நடைபெறும் குழந்தைகள் தின விழாவில் முதலமைச்சர் விஜய் பங்கேற்றுள்ளார்.

பள்ளியில் உள்ள அனைத்து மாணவி, மாணவர்களுக்கும் விஜய் அவர்களின் இடத்திற்கே சென்று கேக்களை வழங்கி வாழ்ததுகளை தெரிவித்தார்.

அந்த வாழ்த்து அட்டையில், All is Well.. Confident ah irunga என்றும் குழந்தைகள் தின வாழ்த்துகள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மாணவ- மாணவிகளுக்கு பாராட்டு

கொளத்தூர் பள்ளியில் முதலமைச்சர் விஜய் மாணவ- மாணவிகளுக்கு கேக் வழங்கியப் பிறகு, வேலுநாச்சியார் போல் வேடமணிந்து வந்த மாணவியை பேசவைத்து கைதட்டி முதலமைச்சர் விஜய் பாராட்டுகளை தெரிவித்தார்.

பாரதியார் போல் வேடமணிந்து வந்த மாணவனை பேசவைத்து கைதட்டி பாராட்டி முதலமைச்சர் விஜய் மகிழ்ந்தார்.

ரூ. 9.27 கோடி நிதி ஒதுக்கீடு

முதலமைச்சர் ஜோசப் விஜய்யின் உத்தரவின் படி, குழந்தைகள் தினத்தை கொண்டாடும் விதமாக, இன்று அரசு மற்றும் அரசு உதவிபெறும் தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் உள்பட 61,84,566 நபர்களுக்கு கேக்குகள் வழங்க 9.27 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, இன்று வழங்கபட்டது.

FSSAI தரம்

அனைத்து பள்ளி மாணவர்களுக்கு குழந்தைகள் நாள் வாழ்த்து அட்டைகள் வழங்கி குழந்தைகள் நாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் மூலம் கேக்குகளுக்கான ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு, அதனடிப்படையில் நான்கு பெருநிறுவனங்கள் வாயிலாக FSSAI தரத்திலுள்ள கேக்குகள் மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டன.

SCROLL FOR NEXT