தமிழக செய்திகள்

தமிழக முதலமைச்சர் விஜய் கேரளா செல்லவில்லை எனத் தகவல்

கேரள மாநில முதல்வர் பதவி ஏற்பு விழாவில் விஜய் பங்கேற்பார் எனத் தகவல் வெளியான நிலையில், தற்போது பங்கேற்கவில்லை எனத் தெரிகிறது.

தமிழக சட்டசபை தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. காங்கிரஸ், இரண்டு இடதுசாரி கட்சிகள், விசிக, ஐ.யு.எம்.எல். ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் விஜய் கடந்த 10-ந்தேதி முதலமைச்சராக பதவி ஏற்றார். பதவி ஏற்பு விழாவில் ராகுல் காந்தி கலந்து கொண்டார்.

கேரள மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி தலைமையிலான UDF கூட்டணி ஆட்சியை கைப்பற்றியுள்ளது. சதீசன் முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவர் நாளை கேரள மாநில முதல்வராக பதவி ஏற்க உள்ளார். இந்த பதவி ஏற்பு விழாவில் தமிழக முதலமைச்சர் விஜய் கலந்து கொள்வார் எனத் தகவல் வெளியானது. காங்கிரஸ் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் கேரள மாநில முதல்வராக சதீசன் பதவி ஏற்கும் விழாவில் தமிழக முதலமைச்சர் விஜய் பங்கேற்கவில்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது.