காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான சோனியா காந்தி நேற்று முன்தினம் இரவு திடீரென டெல்லியில் உள்ள கங்காராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
காய்ச்சல் காரணமாக சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு தற்போது ஆண்டிபயாட்டிக் வழங்கப்பட்டு வருவதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவுவெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில் அவர் கூறியதாவது:-
காங்கிரஸ் நாடாளுமன்றக் குழு தலைவர் சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதை அறிந்து கவலை அடைந்தேன்.
சோனியா காந்தி விரைவில் நலமுடன் திரும்புவார் என நம்புகிறேன், அவர் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.