தமிழக செய்திகள்

3 நாட்கள் மருத்துவர்கள் கண்காணிப்பில் முதலமைச்சர்- மருத்துவமனை புதிய அறிக்கை

மருத்துவமனையில் இருந்து தனது பணியை தொடர்ந்து மேற்கொள்வார்.முதலமைச்சருக்கு மேலும் சில பரிசோதனைகளை மேற்கொள்ள இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மாலை மலர்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை வழக்கமான நடைபயிற்சி மேற்கொண்டபோது லேசான தலை சுற்றல் ஏற்பட்டது. இதனால் அவர் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தேவையான மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில், முதலமைச்சரின் உடல்நலம் குறித்து அப்பல்லோ மருத்துவமனை தரப்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து மருத்துவ அறிக்கையில்," முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 3 நாட்கள் மருத்துவமனையில் டாக்டர்கள் கண்காணிப்பில் இருப்பார். அவர் ஓய்வெடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளார். மருத்துவமனையில் இருந்து தனது பணியை தொடர்ந்து மேற்கொள்வார்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அவருக்கு மேலும் சில பரிசோதனைகளை மேற்கொள்ள இருப்பதாக அப்போலோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.