தமிழக செய்திகள்

வெற்றி துரைசாமியின் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

வெற்றி துரைசாமியின் செய்தியை பார்த்து மிகுந்த வேதனையும் அடைந்தேன்.சைதை துரைசாமிக்கு இதயபூர்வமான இரங்கல்.

மாலை மலர்

சென்னை மாநகராட்சி முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியிருப்பதாவது:-

இமாச்சல பிரதேசத்தில் நடந்த கார் விபத்தில் சிக்கி வெற்றி துரைசாமி உயிரிழந்து, அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது குறித்த செய்தியை பார்த்து மிகுந்த வேதனையும் அடைந்தேன்.

மகனை இழந்து தவிக்கும் சைதை துரைசாமிக்கு இதயபூர்வமான ஆறுதலையும், ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.