தமிழக செய்திகள்

காசிமேடு மீனவர்கள் 9 பேர் மாயம்: உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் நிதியுதவி அறிவிப்பு

ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டம் கோத்தப்பட்டினம் மற்றும் பள்ளிபாலம் கடற்கரைப் பகுதிகளில் மீனவர்களின் உடல்கள் கரை ஒதுங்கின.

சென்னை மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்று படகு என்ஜின் பழுதடைந்து ஆந்திரப் பிரதேச மாநில கடற்பகுதியில் சடலமாக மீட்கப்பட்ட மீனவர்கள் குடும்பத்தினருக்கு இரங்கல் மற்றும் நிதியுதவியை முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

சென்னை காசிமேட்டிலிருந்து ஆழ்கடல் மீன்பிடிக்கச் சென்ற 9 மீனவர்கள், 'முரசு' புயல் மற்றும் மோசமான வானிலை காரணமாக நடுக்கடலில் விசைப்படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளாகினர். இந்த நிலையில் ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டம் கோத்தப்பட்டினம் மற்றும் பள்ளிபாலம் கடற்கரைப் பகுதிகளில் மீனவர்களின் உடல்கள் கரை ஒதுங்கின. இதில் சில உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

விபத்தில் உயிரிழந்தவர்களிக்கு தமிழக முதலமைச்சர் விஜய் நிதியுதவி மற்றும் இரங்கலை தெரிவித்துள்ளார். இது குறித்து முதலமைச்சர் தனது சமூகவலை தள பதிவிக் குறிப்பிட்டுள்ளதாவது

சென்னை மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடந்த 29.10.2026 அன்று விசைப்படகில் மீன்பிடிக்கக் கடலுக்குச் சென்ற கா.பக்கிரிசாமி (எ)சூர்யா (வயது 49) ,ம.குப்பன் (வயது 48), சே.மோகன் (வயது 47) ,காராஜேஷ் (வயது 52) ,ஆ.முருகன் (வயது 48) திருவருப்புசாமி (வயது 58), சி.விஜயகாந்த் (வயது 44) .அ.அரவிந்த் (வயது 40) , மு.நாராயணன் (வயது 57) ஆகிய 9 மீனவர்கள் தமிழ்நாடு மீன்வளம் மற்றும் மீனவர் நலத் துறையால் வழங்கப்பட்ட புயல் மற்றும் வானிலை முன்னெச்சரிக்கையினால், ஆந்திரப் பிரதேச மாநிலம், நிஜாம்பட்டினம் மீன்பிடித் துறைமுகத்தில் பாதுகாப்பாக இருந்த நிகைளில், 02.11.2026 அன்று இரவு, அந்தப் படகு ராமாயபட்டினம் துறைமுகத்தை நோக்கிச் சென்றதாகவும். நடுக்கடலில் என்ஜின் செயமிழந்ததாகவும், காணாமல் போன படகில் இருந்த மீனவர்களால் வார்லெஸ் தொடர்பு மூலம் மற்றொரு விசைப்படகில் இருந்த மீனவர்களுக்கு 03.11.2026 அன்று அதிகாலை தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், காணாமல் போன படகிலிருந்து எவ்வித தகவல்தொடர்பும் கிடைக்கப் பெறாததாலும், அவர்களது இருப்பிடம் குறித்த எவ்வித தகவலும் தெரியாததாலும், சென்னை மீன்பிடித் துறைமுக மீன்பிடிப் படகுகள், ஆந்திரப் பிரதேச மாநில மீன்பிடிப் படகுகள் மற்றும் இந்தியக் கடலோரக் காவல்படைக் கப்பல்கள் மூலம் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும்,

காணாமல் போன மீனவர்களின் நிலையை அறிய, ஆந்திரப் பிரதேச மாநில அதிகாரிகள் மற்றும் காணாமல் போன மீனவர்களின் குடும்பங்களுடன் ஒருங்கிணைந்து செயல்படுமாறும் தமிழ்நாடு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அறிவுறுத்தப்பட்ட நிலையில், ஆந்திரப் பிரதேச மாநிலம், பிரகாசம் மாவட்டத்தில் உள்ள கோதபட்டினம் கடலோரத்தில் .சே.மோகன், .ஆ.முருகன், .விஜயகாந்த் ஆகிய மீனவர்கள் சடலங்களாக மீட்கப்பட்டு அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்ற துயரமான செய்தியை அறிந்து மிகுந்த வருத்தமும், வேதனையும் அடைந்தேன்.

மேலும், மீட்கப்பட்டுள்ள இரண்டு சடலங்களை அடையாளம் காணும் பணியினையும், காணாமல் போன எஞ்சிய மீனவர்களைத் தேடும் பணியினையும் விரைவுபடுத்துமாறு உத்தரவிட்டுள்ளேன்.

இச்சம்பவத்தில் உயிரிழந்த மீனவர்களை இழந்துவாடும் அவர்களது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, அவர்களது குடும்பத்தினருக்குத் தலா ஏழு இலட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்கிடவும், அதில் தலா இரண்டு இலட்சம் ரூபாய் உடனடியாக வழங்கிடவும், அவர்களது உடல்களை அரசு செலவில் தமிழ்நாட்டிற்குக் கொண்டுவந்து அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்க நடவடிக்கை மேற்கொள்ளவும் உத்தரவிட்டுள்ளேன்.

என்று தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT