9 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பை பகுதியில் பெய்து வரும் கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டு ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக சென்னை சென்ட்ரல்-மும்பை இடையே இயக்கப்படும் ரெயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
மும்பை ஜி.எஸ்.டி.-சென்னை சென்ட்ரல் இடையே இயக்கப்படும் சூப்பர் பாஸ்ட் மெயில் (எண்-22157) நாளை முதல் 24-ந்தேதி வரை முழுவதும் ரத்து செய்யப்படுகிறது.
இதே போல சென்ட்ரலில் இருந்து காலை 6.35 மணிக்கு புறப்படும் ஜி.எஸ்.டி. எக்ஸ்பிரஸ் ரெயில் நாளை முதல் 24-ந்தேதி வரை முழுவதும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
மேலும் 9 ரெயில்கள் மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளன.
திருச்சி-அகமதாபாத், மதுரை-லோக் மணியா, காரைக்கால்-லோக் மணியா, இக்டா நகர்- சென்னை சென்ட்ரல், அகமதாபாத்-திருச்சி, லோக் மணியா திலக்-மதுரை, ராஜ் கோட்-கோவை உள்ளிட்ட 9 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டு உள்ளது.