தமிழக செய்திகள்

சென்னையில் புதிதாக 6 துணை மின் நிலையங்கள் அமைக்கப்படும்- அமைச்சர் நிர்மல்குமார்

15 நிமிடங்களில் மின் வெட்டை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

சொந்த காரணங்களால் சிலர் பணம் வாங்கிக்கொண்டு செயல்படுகிறார்கள் என பவர்கட் தொடர்பாக அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்.

தமிழ்நாடு சட்டசபையில் இன்று வினாக்கள் விடை நேரம் நடைபெற்று வருகிறது. மின்சாரத்துறை தொடர்பாக எம்எல்ஏக்கள் கோரிக்கை வைத்து வரும் நிலையில், அமைச்சர் நிர்மல்குமார் பதில் அளித்துள்ளார்.

அப்போது, துணை மின்நிலையம் அமைத்துத் தர வேண்டும் என எம்எல்ஏ செல்லசாமி கோரிக்கை வைத்துள்ளார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் நிர்மல்குமார்," குறை மின்னழுத்தப் பிரச்சனை குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.

சென்னையில் தாழ்வாக உள்ள மின்பெட்டிகளை உயர்த்தி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" என்றார்.

தொடர்ந்து, திருத்துறைப்பூண்டியில் 110KV துணை மின்நிலையம் தேவை என எம்எல்ஏ மாரிமுத்து கோரிக்கை வைத்தார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் நிர்மல் குமார்,"மதுரையில் 6 புதிய துணை மின் நிலையங்களுக்கான பணிகள் நடைபெறுகிறது" என்றார்.

பத்மநாபபுரம் - மலைக்கிராமங்களில் மின்வசதி இல்லை. துணை மின்நிலையம் அமைத்துத்தர வேண்டும் என எம்எல்ஏ செல்லசாமி கோரிக்கை வைத்தார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் நிர்மல் குமார்,"ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும். இந்த ஆண்டில் 6,000 டிரான்ஸ்ஃபார்மர்களை மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

குறை மின்னழுத்தப் பிரச்சனை குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.

15 நிமிடங்களில் மின் வெட்டை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

சென்னையில் புதிதாக 6 துணை மின் நிலையங்கள் அமைக்கப்படும்" என்றார்.

கொரடாச்சேரி பகுதியில் ஒருநாளைக்கு 10 முறை பவர் கட் ஆகிறது என எம்எல்ஏ பூண்டி கலைவாணன் குற்றம்சாட்டினார்.

சொந்த காரணங்களால் சிலர் பணம் வாங்கிக்கொண்டு செயல்படுகிறார்கள் என பவர்கட் தொடர்பாக அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம் அளித்தார்.

மேலும் அவர்,"இன்னும் 6 மாதங்களில் பிரச்சனை சரி செய்யப்படும்" என்றார்.