தமிழக செய்திகள்

முதலிடத்தை பிடித்த சென்னை அணி: கோப்பையை வழங்கிய முதலமைச்சர் விஜய்

தேசிய அளவில் நடைபெற்ற தேசிய இளையோர் தடகள போட்டியில், மொத்தம் 34 பதக்கங்களை பெற்று, தமிழ்நாடு தேசிய அளவில் முதலிடத்தை பிடித்தது.

ஜப்பானில் நடைபெற்ற ஆசிய பாரா விளையாட்டு போட்டி, தேசிய இளையோர் போட்டி மற்றும் முதலமைச்சர் கோப்பை ஆகிய போட்டிகளில் பதக்கங்களை வென்ற தமிழக விளையாட்டு வீரர்களுக்கு, முதலமைச்சர் விஜய் கோப்பை மற்றும் பரிசு தொகைகளை வழங்கினார்.

சென்னை ஜவஹர்லால் நேரு உள் அரங்கத்தில், முதலமைச்சர் கோப்பை போட்டி, தேசிய இளையோர் போட்டி மற்றும் பாரா ஆசிய விளையாட்டு போட்டிகளில் பதக்கங்களை வென்ற விளையாட்டு வீரர்களை பாராட்டும் வகையில் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் தமிழக முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் கலந்துகொண்டு விளையாட்டு வீரர்களுக்கு பதக்கங்களையும் பரிசுத் தொகைகளையும் வழங்கினார்.

ஆசிய பாரா விளையாட்டு போட்டி

இந்த ஆண்டு ஜப்பான் ஐச்சி-நகோயாவில் ஆசிய பாரா விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன. இதில் தமிழகத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளி வீரர்கள் கலந்துகொண்டு பதக்கங்களை வென்றனர்.

இதேபோன்று தமிழ்நாட்டில் சமீபத்தில் மாநில அளவிலான முதலமைச்சர் கோப்பை போட்டி நடைபெற்றது.

அதில் தமிழகத்தை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் கலந்துகொண்டு தங்களது திறமைகளை நிரூபித்தனர்.

தேசிய இளையோர் போட்டி

இதையடுத்து தேசிய அளவில் நடைபெற்ற தேசிய இளையோர் தடகள போட்டியில், 9 தங்கம், 12 வெள்ளி மற்றும் 15 வெண்கலம் என மொத்தம் 34 பதக்கங்களை பெற்று, தமிழ்நாடு தேசிய அளவில் முதலிடத்தை பிடித்தது.

முதலமைச்சர் கோப்பை போட்டி

முதலமைச்சர் கோப்பை போட்டியில் முதலிடத்தை சென்னை அணியும், இரண்டாவது இடத்தை செங்கல்பட்டு அணியும், மூன்றாவது இடத்தை கோவை அணியும் வென்றது.

இதையடுத்து இந்த விளையாட்டு போட்டிகளில் கலந்துகொண்டு பதக்கங்களை வென்ற வீரர்களை பாராட்டும் வகையில் நேரு விளையாட்டு அரங்கில் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது.

ரூ.17 கோடி பரிசுத்தொகை

இதில் மாநில அளவிலான போட்டியில் சிறப்பாக செயல்பட்ட விளையாட்டு வீரர்களுக்கு பரிசுத்தொகை ரூபார் 17 கோடியை முதலமைச்சர் விஜய் வழங்கினார்.

மேலும் முதலமைச்சர் கோப்பை போட்டியில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாவட்டங்களுக்கு முதலமைச்சர் விஜய் கோப்பைகளை பரிசாக வழங்கி கெளரவித்தார்.

SCROLL FOR NEXT