தமிழக செய்திகள்

சென்னை உள்ளிட்ட 17 மாவட்டங்களில் இன்று மழை! - வானிலை மையம் தகவல்

இடியுடன் கூடிய மழை பெய்யும்.

தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

இந்நிலையில் தமிழகத்தில் இன்று சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை, திருவள்ளுர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, வேலூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, அரியலூர், கடலூர், கள்ளக்குறிச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, பெரம்பலூர், விழுப்புரம், ஈரோடு, நீலகிரி உள்ளிட்ட 17 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை ஆங்காங்கே கனமழை மற்றும் இடியுடன் கூடிய மழை எதிர்பார்க்கப்படுகிறது.