வானவில் பிரைட் அணிவகுப்பு 
தமிழக செய்திகள்

எழும்பூரில் 18ஆவது வானவில் பெருமித அணிவகுப்பு

LGBTQ+ ஆதரவாளர்கல் மட்டுமில்லாமல், எதிர்பாலீர்ப்பு கொண்டவர்கள், ஆதரவாலர்கள், சமூக ஆர்வலர்கள் என அனைவரும் பங்குபெற்று கொண்டாடி மகிழ்வார்கள்.

தன்பாலின ஈர்ப்பாளர்கள், இருபாலின ஈர்ப்பாளர்கள், மூன்றாம் பாலினத்தினர்கள், குயர் மற்றும் பிற என்பதைக்குறிக்கும் LGBTQ+ பெருமை இயக்கம் உலகளவில் செழித்து உள்ளது.

இந்நிலையில் இதனைக்கொண்டாடும் வகையில், ஜூன் மாதத்தை பிரைட் மாதம் என்று சிறப்பித்து பல்வேறு நாடுகளிலும் பெருமித அணிவகுப்பு நடைபெற்றுவருகிறது.

அமெரிக்காவில் நியூயார்க் நகரில், பிரைட் நிகழ்ச்சியின் அணிவகுப்பு இன்று மதியம் 12.00 மணி அளவில் தொடங்கியது. இந்திய அளவில் அங்காங்கே ஜூன் மாதத்தில் இந்நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் மைதானத்திற்கு வெளியே வருடாந்திர விழாவான "வானவில் பெருமித அணிவகுப்பு" (Pride March) இன்று நடைபெறவுள்ளது. இந்நிகழ்ச்சி மாலை 3.30 அளவில் ராஜரத்தினம் மைதானம் முன்வாசலில் தொடங்கவுள்ளது.

விழிப்புணர்வு பேரணி:

இந்த நிகழ்வை, மாற்றுப் பாலினத்தவரின் மனவுறுதி, மகிழ்ச்சி மற்றும் சமூக ஒற்றுமையைக் கொண்டாடும் வகையில் தமிழ்நாடு ரெயின்போ அமைப்பு ஏற்பாடு செய்துள்ளது.

அன்பு, சமத்துவம் மற்றும் சுதந்திரம் ஆகிய அடிப்படை கருத்துகளை மையமாகக் கொண்டிருப்பதோடு, வெளிப்படைத்தன்மை, பன்முகத்தன்மை மற்றும் பாகுபாடின்மை ஆகியவற்றின் கோக்கங்களை கொண்ட விழிப்புணர்வு பேரணியாக இந்த அணிவகுப்பு கொண்டாடப்படுகிறது.

பலரும் பல்வேறு கருத்துகளை முன்மொழியும் பதாகைகளை ஏந்தியபடியும், பலவர்ண கொடியான வானவில் கொடியை ஏந்தியும், அவரவர்க்கு பிடித்தபடி உடை அணிந்தும், தங்களை அழகு வண்ணமையமாக அலங்கரித்தும், பட்டாம்பூச்சி போல மகிச்சியுடனும் கலகப்புடனும் சாலை அணிவகுப்பில் கலந்துகொள்வார்கள்.

இந்த அணிவகுப்பு 2009 முதல் 2011 வரை மெரினா கடற்கரையிலும், 2012 இல் பெசன்ட் நகரில் உள்ள எலியட்ஸ் கடற்கரையிலும் நடைபெற்றது. 2013 முதல், எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற்றுவருகிறது.

இந்த பிரைட் மாதத்தைக் கொண்டாடும் வகையில் சென்னை நகரம் முழுவதும் வானவில் வண்ணங்களால் நிரம்பி, மிகுந்த உற்சாகத்தில் உள்ளது. இதனைக் கொண்டாடும் வகையில் நகரின் முக்கிய கட்டிடமான ரிப்பன் கட்டிடம் வானவில் வணங்களால் ஒளிரூட்டப்பட்டுள்ளது.

யார் பங்குபெறலாம்?

இந்நிகழ்ச்சில் LGBTQ+ ஆதரவாளர்கல் மட்டுமில்லாமல், எதிர்பாலீர்ப்பு கொண்டவர்கள், ஆதரவாலர்கள், சமூக ஆர்வலர்கள் என அனைவரும் பங்குபெற்று கொண்டாடி மகிழ்வார்கள். இவ்வணிவகுப்பிற்கு வருபவர்கள் அவர்கள் விரும்பினால்,"Straight Ally" அல்லது "I support LGBTQA+ rights" போன்ற பதாகைகளை கொண்டுவரலாம் என இதன் அமைப்புகள் கூறியுள்ளது.