தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, நாளையும் (நவ. 9) தமிழக அரசு விடுமுறை அறிவித்துள்ளது. சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள் சென்னை திரும்புவதற்கு வசதியாக சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில், சென்னை மெட்ரோ ரெயில் நாளை ஞாயிறு கால அட்டவணைப்படி மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
நீலம் மற்றும் பச்சை வழித்தடங்கள் காலை 5 மணி நண்பகல் 12 மணி வரை 10 நிமிடங்களுக்கு ஒருமுறை ரயில் இயக்கப்படும்.
நண்பகல் 12 முதல் 8 மணி வரை 7 நிமிடங்களுக்கு ஒருமுறை ரயில் இயக்கப்படும்.
இரவு 8 மணி முதல் 10 மணி வரை 10 நிமிடங்களுக்கு ஒரு முறையும், இரவு 10 முதல் 11 மணி வரை 15 நிமிடங்களுக்கு ஒருமுறையும் ரயில் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மஞ்சள் வழித்தடத்தில் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை 15 நிமிடங்களுக்கு ஒருமுறை ரெயில் இயக்கப்படவுள்ளது.
இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.