தமிழக செய்திகள்

சென்னையில் மின்வெட்டு: இருளில் மூழ்கிய மருத்துவமனை - டார்ச்லைட் வெளிச்சத்தில் மருத்துவர்கள் அவசர சிகிச்சை

3 மணி நேரமாக மின்வெட்டு தொடர்ந்ததால் பிற வார்டுகளில் இருந்த நோயாளிகளும் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மின்தடை ஏற்படுவது தொடர்கதையாகி வருகிறது. குறிப்பாக சென்னையில் பல மணிநேர மின்வெட்டு ஏற்பட்டு வருகிறது.

இந்நிலையில் சென்னை பெருங்குடி பகுதியில் 3 மணிநேரமாக மின்தடை ஏற்பட்டதால் அங்குள்ள பிரபல தனியார் மருத்துவமனை இருளில் மூழ்கியது.

அங்கு அவசர சிகிச்சை பிரிவில் மருத்துவர்கள் டார்ச்லைட் உதவியுடன் அறுவை சிகிச்சையில் ஈடுபட்டனர். 3 மணி நேரமாக மின்வெட்டு தொடர்ந்ததால் பிற வார்டுகளில் இருந்த நோயாளிகளும் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

மின்வெட்டு குறித்து அதிகாரிகளிடம் புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது மின்தடை நீங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.