சென்னையில் வரும் 24, 25 ஆகிய தேதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்தர் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் வரும் 23ம் தேதி முதல் அடுத்த 5 நாட்களுக்கு பரவலாக பருவமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதன்படி, காவிரி-டெல்டா மாவட்டங்களில் மிக கனமழைக்கும், சென்னையில் 2 நாட்கள் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தனியார் வானிலை ஆய்வாளர் தெரிவித்துள்ளார்.
கடலூர், மயிலாடுதுறை, காரைக்கால், நாகை, திருவாரூர், தூத்துக்குடி, நெல்லையில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தனியார் வானிலை ஆய்வாளர் தெரிவித்துள்ளார்.