மத்திய கிழக்கு போர் பதற்றத்தால் பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
நேற்று (ஞாயிறு) சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.107.77-க்கும், டீசல் ரூ.99.55-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இயற்கை எரிவாயு ஒரு கிலோ ரூ.95.00 -க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில் இன்று (திங்கட்கிழமை) சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு 11 காசுகள் உயர்ந்து ரூ.107.87-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
டீசல் லிட்டருக்கு 10 காசுகள் உயர்ந்து ரூ.99.65-க்கு விற்பனை செய்யப்படுகிறது.