தமிழக செய்திகள்

சென்னை: டெக் மகிந்திரா நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து

இருப்பினும் பலர் உள்ளே சிக்கிக் கொண்டனர்.

சென்னை, சோழிங்கநல்லூரை அடுத்த காரப்பாக்கம் பகுதியில் டெக் மகிந்திரா ஐடி நிறுவனத்தின் பிரமாண்ட அலுவலக வளாகம் அமைந்துள்ளது. இங்கு ஆயிரக்கணக்கான ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில் இன்று வளாகத்தில் உள்ள கட்டிடம் ஒன்றில் திடீரென தீவிபத்து ஏற்பட்டு கரும்புகை வெளியேறத் தொடங்கியது.

அடுத்த சில நிமிடங்களில் தீ வேகமாகப் பரவத் தொடங்கியதால், அலுவலகத்தில் இருந்த ஊழியர்கள் மற்றும் பாதுகாப்புப் பணியாளர்கள் அலறியடித்துக் கொண்டு கட்டிடத்தை விட்டு வெளியேறினர். இருப்பினும் பலர் உள்ளே சிக்கிக் கொண்டனர்.

விபத்து குறித்த தகவல் அறிந்து வந்த தீயணைப்பு படையினர் விரைவாகச் செயல்பட்டு, கட்டிடத்திற்குள் சிக்கியிருந்த ஊழியர்களைப் பத்திரமாக மீட்டனர்.

தீயை அணைக்கும் பணிகள் தொடர்ந்து நடந்து வரும் சூழலில் அந்த பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்துள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளது.

கட்டிடத்தின் மின்சாரப் பகிர்மானப் பெட்டியில் ஏற்பட்ட மின் கசிவு அல்லது சார்ட் சர்கியூட் காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.