தமிழக செய்திகள்

சென்னை எழும்பூர்- நாகர்கோவில், மதுரைக்கு நாளை சிறப்பு ரெயில்

சென்னை எழும்பூரில் இருந்து மதியம் 1.25 மணிக்கு நாகர்கோவிலுக்கு சிறப்பு ரெயில் புறப்படுகிறது.

தமிழக சட்டசபைக்கான தேர்தல் பிரசாரம் இன்று மாலையுடன் ஓய்ந்தது. நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. வெளியூரில் உள்ள வாக்காளர்கள் வாக்களிப்பதற்காக சொந்த ஊர் திரும்பிய வண்ணம் உள்ளனர். அவர்களுக்கான தமிழக போக்குவரத்துத்துறை சிறப்பு பேருந்துகள் இயக்கி வருகிறது.

பேருந்துகளை தவிர்த்து ரெயில்களிலும் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கிறது. வாக்குப்பதிவு நடைபெறும் அன்று முகூர்த்த நாளும் கூட. இதனால் மக்கள் அதிக அளவில் சொந்த ஊர் திரும்புகின்றனர். இதனால் மக்கள் வசதிக்காக தென்னக ரெயில்வே சென்னை எழும்பூரில் இருந்து மதுரைக்கு நாளை இரவு 9.55 சிறப்பு மெமு ரெயில் இயக்குகிறது.

அதேபோல் கோடைக்கால சிறப்பு ரெயிலாக நாளை மதியம் 1.25 மணிக்கு சென்னை எழும்பூரில் இருந்து புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 2.30 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும் வகையில் சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.