போகி பண்டிகை 
தமிழக செய்திகள்

போகி பண்டிகைக்கு இவற்றை எரிக்கக்கூடாது, மீறினால் அபராதம்- சென்னை மாநகராட்சி எச்சரிக்கை

இந்த உத்தரவை மீறுபவர்களுக்கு ரூ.1000 அபராதம் விதிக்கப்படும் என அறிவித்துள்ளது.

சென்னை:

நமது முன்னோர்கள் பொங்கல் திருநாளுக்கு முன் வீட்டில் உள்ள இயற்கை சார்ந்த தேவையில்லா பொருட்களை எரித்து பழையன கழிதலும், புதியன புகுதலும் என்ற அடிப்படையில் போகி பண்டிகையினை கொண்டாடி வந்துள்ளனர்.

ஆனால் தற்போது போகி பண்டிகையின்போது பழைய பொருட்களான பிளாஸ்டிக், செயற்கை இழைகளால் தயாரிக்கப்பட்ட துணிகள், ரப்பர் பொருட்கள், பழைய டயர் மற்றும் டியூப், ரசாயனம் கலந்த பொருட்கள் போன்றவையும் எரிக்கப்படுகின்றன. இதனால் காற்று மாசு ஏற்படுவதோடு, இதில் இருந்து வெளியாகும் நச்சு வாயுக்களால் மூச்சு திணறல், கண் எரிச்சல் போன்ற பாதிப்பும் மக்களுக்கு ஏற்படுகிறது.

இதையடுத்து சென்னையில் போகி பண்டியையின்போது டயர், பிளாஸ்டிக் பொருட்களை மக்கள் எரிக்கக்கூடாது என சென்னை மாநகராட்சி எச்சரித்துள்ளது.

இந்த விதியை மீறி எரித்தால் ரூ.1000 அபராதம் விதிக்கப்படும் என்றும், இவற்றை அனைத்து மண்டலங்களிலும் கண்காணிக்க வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.