தமிழக செய்திகள்

சென்னை விமான நிலையம் - கிளாம்பாக்கம் மெட்ரோ: நிலம் கையப்படுத்தும் பணிகளுக்கு அரசு அனுமதி

சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து மெட்ரோ ரெயில் மூலம் நேரடியாக கிளாம்பாக்கம் வரை செல்லலாம்.மெட்ரோ விரிவாக்கத்துக்கான திட்ட அறிக்கையை மெட்ரோ ரெயில் நிர்வாகம் தமிழக அரசிடம் சமர்ப்பித்த நிலையில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

மாலை மலர்

சென்னை விமான நிலையத்தில் இருந்து பல்லாவரம், குரோம்பேட்டை, தாம்பரம், பெருங்களத்தூர், வண்டலூர் வழியாக கிளாம்பாக்கத்தை இணைக்கும் வகையில் மொத்தமாக 15.46 கி.மீ. தூரத்துக்கு மெட்ரோ வழித்தடம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதனால் சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து மெட்ரோ ரெயில் மூலம் நேரடியாக கிளாம்பாக்கம் வரை செல்லலாம்.

இந்த மெட்ரோ விரிவாக்கத்துக்கான திட்ட அறிக்கையை மெட்ரோ ரெயில் நிர்வாகம் தமிழக அரசிடம் சமர்ப்பித்த நிலையில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

மேலும், நிலம் கையகப்படுத்தும் பணிகளுக்கு சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்திற்கு தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கி உள்ளது.