தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
பாலக்காடு கோட்டத்தில் நடைபெறும் பராமரிப்பு பணி காரணமாக, மங்களூரு சென்ட்ரல்- சென்னை சென்ட்ரல் இடையேயான வெஸ்ட் கோஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:-
* மங்களூரு சென்ட்ரலில் இருந்து வருகிற 5,12,19,26 ஆகஸ்டு 2 ஆகிய தேதிகளில் இரவு 11.45 மணிக்கு புறப்பட்டு சென்னை சென்ட்ரல் வரும் வெஸ்ட் கோஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்.22638) 50 நிமிடம் தாமதமாக சென்னை சென்ட்ரல் வந்தடையும்.
* இதேபோல, மங்களூரு சென்ட்ரலில் இருந்து வருகிற 7,9,14,16,21,23,28,30 ஆகஸ்டு 4 ஆகிய தேதிகளில் இரவு 11.45 மணிக்கு புறப்பட்டு சென்னை சென்ட்ரல் வரும் வெஸ்ட் கோஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயில் (22638) 30 நிமிடம் தாமதமாக சென்னை சென்டிரல் வந்தடையும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.