ஆன்மிகம்

சிவன்மலை ஆண்டவன் உத்தரவு பெட்டியில் அரிசி, ரூபாய் நோட்டு வைத்து வழிபாடு

தற்போது அரிசி விளைச்சல் பாதிப்பு மற்றும் விலை உயர்ந்து வரும் சூழலில் இந்த மாற்றத்தால் என்ன பலன் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு பக்தர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

சிவன்மலை கோவிலில் ஆண்டவன் உத்தரவு பெட்டியில், முன்பு வைக்கப்பட்ட தேங்காய்கள் மாற்றப்பட்டு, அரிசி மற்றும் ரூ.101 வைத்து சிறப்பு பூஜை செய்யப்பட்டது. இந்த மாற்றம் அரிசி விளைச்சல் பாதிப்புக்கு தீர்வு தருமா என பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.

திருப்பூர் மாவட்டம் காங்கயம் அருகே உள்ள சிவன்மலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பிரசித்தி பெற்ற ‘ஆண்டவன் உத்தரவு பெட்டி’ அமைந்துள்ளது. கருவறை முன்பு உள்ள மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ள இந்த பெட்டியில் பக்தர்களின் கனவில் தோன்றும் பொருட்கள் பூ போட்டு உத்தரவு பெற்று வைக்கப்படுவது வழக்கம். இந்த பெட்டியில் வைக்கப்படும் பொருட்கள் சமூகத்தில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்பது ஐதீகமாகும்.

இதற்கு முன்பு மூன்று தேங்காய்கள் வைக்கப்பட்டு பூஜிக்கப்பட்டு வந்த நிலையில், ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி பகுதியைச் சேர்ந்த விவசாயி கணபதியின் (50) கனவில் வந்த முருகப்பெருமான், அரிசி மற்றும் ரூ.101 வைத்து வழிபடக் கோரியதாக தெரிவித்தார்.

இதையடுத்து கோவில் நிர்வாகிகள் பூ போட்டு அனுமதி பெற்று பெட்டியில் இருந்த தேங்காய்கள் எடுக்கப்பட்டு, அரிசியும் ரூ.101-ம் வைத்து சிறப்பு பூஜை செய்தனர். தற்போது அரிசி விளைச்சல் பாதிப்பு மற்றும் விலை உயர்ந்து வரும் சூழலில் இந்த மாற்றத்தால் என்ன பலன் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு பக்தர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

SCROLL FOR NEXT