தமிழக செய்திகள்

தாம்பரம்-விழுப்புரம் இடையிலான பயணிகள் ரெயில் சேவையில் மாற்றம்

விழுப்புரத்தில் இருந்து சென்னை கடற்கரை வரும் பயணிகள் ரெயில் விழுப்புரத்திற்கு பதிலாக முண்டியம்பாக்கத்தில் இருந்து மதியம் 1.30 மணிக்கு புறப்படும்.

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

விழுப்புரம் பணிமனையில் பராமரிப்பு பணி நடைபெறுவதால் பயணிகள் ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, திருப்பதியில் இருந்து காலை 4.10 மணிக்கு புறப்பட்டு புதுச்சேரி செல்லும் பயணிகள் ரெயில் நாளை (சனிக்கிழமை), வருகிற 22, 25 ஆகிய தேதிகளில் புதுச்சேரிக்கு பதிலாக விழுப்புரம் சென்றடையும். அதேதேதியில், தாம்பரத்தில் இருந்து காலை 9.40 மணிக்கு புறப்பட்டு விழுப்புரம் செல்லும் பயணிகள் ரெயில், விழுப்புரத்திற்கு பதிலாக முண்டியம்பாக்கம் செல்லும்.

புதுச்சேரியில் இருந்து எழும்பூர் வரும் பயணிகள் ரெயில் புதுச்சேரிக்கு பதிலாக விழுப்புரத்தில் இருந்து மதியம் 3.35 மணிக்கு புறப்படும். அதே போல, விழுப்புரத்தில் இருந்து சென்னை கடற்கரை வரும் பயணிகள் ரெயில் விழுப்புரத்திற்கு பதிலாக முண்டியம்பாக்கத்தில் இருந்து மதியம் 1.30 மணிக்கு புறப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.