மன்னார் வளைகுடா முதல் தெற்கு உள் கர்நாடகா வரை ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இதன் காரணமாக தமிழகத்தில் இன்றுஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடிமின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரித்து வந்த நிலையில் நேற்று நள்ளிரவு இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது.
தமிழ்நாட்டில் சென்னை, செங்கல்பட்டு, வேலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் கொட்டித்தீர்த்த கோடை மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இந்நிலையில் 7 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், ராமநாதபுரம், திண்டுக்கல், கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.