தமிழக செய்திகள்

சென்னையில் இன்று முதல் 3 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு

கோவை, நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல், பலத்த காற்றுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு.

சென்னையில் இன்று முதல் 3 நாட்களுக்கு மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதேபோல், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி மற்றும் புதுச்சேரியில் நாளை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

வரும் 27ம் தேதி கோவை, நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல், பலத்த காற்றுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.

விருதுநகர், தென்காசி, நெல்லை, நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல் மாவட்டங்களில் 28ம் தேதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

தேனி, மதுரை, கன்னியாகுமரி மாவட்டங்களில் 28ம் தேதி இடி, மின்னல் பலத்த காற்றுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளது.

விருதுநகர், தென்காசி, நெல்லை, நீலகிரி, கோவை, திருப்பூர் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் 29ம் தேதி கனமழைக்கு வாய்ப்புள்ளது.

திண்டுக்கல், தேனி, குமரி ஆகிய மாவட்டங்களில் 29ம் தேதி இடி, மின்னல், பலத்த காற்றுடன் கனமழை பெய்யும்.

தேனி, கோவை, நீலகிரி மாவட்டங்களில் 30ம் தேதி கனமழை பெய்யம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.