தமிழ்நாட்டில் 19 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கோவை, தருமபுரி, திண்டுக்கல், ஈரோடு, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, மதுரை, சேலம், தென்காசி, நாமக்கல்லில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இதேபோல், தேனி, நீலகிரி, தூத்துக்குடி, நெல்லை, திருப்பத்தூர், திருப்பூர், திருவண்ணாமலை, வேலூர், விருதுநகரில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளது.