தமிழக செய்திகள்

17 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.

மாலை மலர்

தமிழகத்திவல் 17 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை இடி மின்னலுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி, நீலகிரி, ஈரோடு, கடலூர், பெரம்பலூர், கோவை, அரியலூர், தென்காசி, நெல்லை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி, தஞ்சை, திருவாரூர், நாகை, விருதுநகர் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது.

சிவகங்கை, மதுரை, கள்ளக்குறிச்சி, தேனி மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.