தமிழக செய்திகள்

கோவை, நீலகிரியில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

சென்னையில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட 19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

* கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

* சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ஈரோடு, சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை, மதுரை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறையில் மாவட்டங்களில் இன்று இடி மின்னல் காற்றுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

* தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் வரை உயரும்.

* சென்னையில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

* தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை, காரைக்காலில் ஜூலை 11 வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

* ஜூலை 16-ல் வட தமிழக கடலோரப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

* தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2-3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும்.

* சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

* சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்சியஸும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸும் இருக்கக்கூடும்.

மீனவர்களுக்கு எச்சரிக்கை

* தெற்கு ஆந்திர கடலோரம், மேற்கு மத்திய வங்கக்கடலில் சூறாவளிக்காற்று மணிக்கு 40-50 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும்.

* தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45-55 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும்.

* சூறாவளிக்காற்று வீசக்கூடிய பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

* மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் ஜூலை 16-ந்தேதி வரை மிதமான மழை பெய்யக்கூடும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.