தமிழக செய்திகள்

தமிழகத்தில் 7 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் தென் தமிழகம் ஆகிய பகுதிகளில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.

தமிழகத்தில் வெப்பத்தின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 13 மாவட்டங்களில் 100 டிகிரிக்கு மேல் பதிவானது. பகலில் வெயில் வறுத்தெடுத்து வரும் நிலையில் ஒரு சில மாவட்டங்களில் சில இடங்களில் மழையும் பெய்து வருகிறது.

இந்த நிலையில் இன்றும் நாளையும் வெப்பம் அதிகரிக்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் தற்போது உள்ள 39 டிகிரி செல்சியஸ் 40 டிகிரி செல்சியசை விட சற்று வெயில் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. அதன் பின்னர் வெயிலின் தாக்கம் படிப்படியாக குறையும். இரவில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட உயரக்கூடும். 2 நாட்கள் இரவில் புழுக்கம் அதிகமாக இருக்கும்.

இதற்கிடையில் தமிழகத்தில் 7 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் தென் தமிழகம் ஆகிய பகுதிகளில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யக்கூடும். சென்னையில் மழைக்கு வாய்ப்பில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.