தமிழக செய்திகள்

மக்கள்தொகை கணக்கெடுப்பு பணி: அதிகாரிகள் இடமாற்றத்துக்கு ஆக. 31 வரை தடை விதித்து அரசு உத்தரவு

கணக்கெடுப்பு பணிகளில் எந்தவித நிர்வாக சிக்கலும் ஏற்படாத வகையில் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அனைத்து துறைத் தலைவர்கள் மற்றும் மாவட்ட கலெக்டர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் நடைபெற உள்ள மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகளில் நிர்வாக சிக்கல்களை தவிர்க்க வரும் ஆகஸ்ட் 31-ந்தேதி வரை அரசு ஊழியர்கள் பணியிட மாற்றத்திற்கு தடை விதித்து அரசு உத்தரவிட்டுள்ளது.

நாடு முழுவதும் மக்கள்தொகை கணக்கெடுப்பு பணிகள் 2 கட்டங்களாக நடத்தப்பட உள்ளன. முதல் கட்டமாக சுய கணக்கெடுப்பு, வீட்டு பட்டியல் தயாரித்தல் மற்றும் வீட்டுவசதி கணக்கெடுப்பு பணிகள் தமிழகத்தில் வருகிற 17-ம் தேதி தொடங்க உள்ளன.

இந்தப் பணிகளில் ஈடுபடும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் இடமாற்றம் செய்யப்பட்டால் கணக்கெடுப்பு பணிகள் பாதிக்கப்படும் என்பதால், இடமாற்றங்களுக்கு கட்டுப்பாடு விதிக்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தி இருந்தது.

இதையடுத்து, தமிழ்நாட்டில் மக்கள்தொகை கணக்கெடுப்பு பணிகள் சுமுகமாக நடைபெறுவதற்காக, நாளை முதல் ஆகஸ்டு 31-ந் தேதி வரை அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் இடமாற்றங்களுக்கு தடை விதித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. மேலும், கணக்கெடுப்பு பணிகளில் எந்தவித நிர்வாக சிக்கலும் ஏற்படாத வகையில் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அனைத்து துறைத் தலைவர்கள் மற்றும் மாவட்ட கலெக்டர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT