மக்களவை திமுக எம்.பி. தயாநிதி மாறன் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-
நம்பிக்கையை விற்று, பதவியை வாங்கும் நச்சுப்பாம்புகள்!
தமிழ்நாட்டுக்கு வந்துவிட்டு #CauveryRights குறித்து பேசாமல் இருப்பவர்கள் துரோகிகள்!
காவிரியில் தமிழ்நாட்டின் உரிமையைக் காவு வாங்கும் #MekedatuDam-க்கு எதிர்ப்புத் தெரிவிக்காதவர்கள் துரோகிகள்!
#NEET தேர்வு முறையையே ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தாமல், தேர்வில் முறைகேடு நடப்பதாக மட்டும் பேசுகிறவர்கள் துரோகிகள்!
பாஜக-வின் குதிரைப் பேரங்களைக் கண்டிக்கிறவர்கள், தவெக-வின் அருவருப்பான குதிரைப் பேரங்களைக் கண்டுகொள்ளாமல் இருப்பதும் துரோகத்தின் தொடர்ச்சியே!
ஆட்சியையும் அமைச்சர்களையும் விமர்சித்து X-இல் பதிவிட்டால்கூட கைது செய்யும் பாசிச தவெக ஆட்சியைக் கண்டிக்காததும் துரோகமே!
டெல்லி போலீசுக்கு சற்றும் குறைவில்லாமல், தமிழ்நாடு போலீசும் #NEETProtest மாணவர்கள் மீது அராஜகத் தாக்குதலை நடத்தியதைக் கண்டிக்காததும் துரோகத்தின் உச்சமே!
தமிழ்நாட்டுக்கு வந்து ஒருவர் அரசியல் பாடம் எடுத்ததைப் படித்தபோது, இதெல்லாம் வரிசையாக நினைவுக்கு வந்தது!
அப்பப்பா… எவ்வளவு துரோகங்கள்!
இவ்வாறு தயாநிதிமாறன் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தேசிய தலைவரும், மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல்காந்தி நேற்று தமிழகத்திற்கு வந்திருந்தார். அப்போது பாஜக கொண்டு வரும் தொகுதி மறுவரையறை ஆதரிப்பவர்கள் எட்டப்பவர்கள் என்று திமுக-வை மறைமுகமாக விமர்சனம் செய்திருந்தார். இந்த நிலையில் தயாநிதிமாறன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.