தமிழக செய்திகள்

காவிரி நீர் விவகாரம்: புதிய ஆணையம் அமைவது அவசியம்- அமைச்சர் ஆதவ் அர்ஜூனா

காவிரி நீர் ஆணையம் மீது நம்பிக்கை இழந்துள்ளோம்.

மேகதாது அணை விவகாரம் தொடர்பாக அமைச்சர் ஆதவ் அர்ஜூனா கூறியதாவது:-

காவிரி ஆணையம் கர்நாடகாவின் அறிக்கையை நிராகரிக்காமல் அப்படியே நீர்வளத்துறை ஆணையத்திற்கு அனுப்பியது தவறு.

உச்சநீதிமன்ற தீர்ப்பை மீறி வரைவு திட்ட அறிக்கையை மத்திய நீர்வள ஆணையத்திற்கு சமர்பிக்க சொன்னது தவறு.

முன்பு விவசாயிகளுக்கான அணை கட்டுவதாக கூறினர், இப்போது பெங்களூரு குடிநீர் தேவைக்காக என்கிறார்கள்.

குடிநீர் தேவை என்ற புதிய யுக்தியை கைகளில் எடுத்து மேகதாதுவில் அணை கட்ட கர்நாடகா முயற்சிக்கிறது.

கர்நாக அரசு யுக்தியை மாற்றியுள்ளது என்பதை நமது கம்யூனிஸ்ட் தோழர்கள் உள்ளிட்டோர் புரிந்து கொள்ள வேண்டும்.

மேகதாது விவகாரம் சட்டசிக்கல் நிறைந்துள்ளதாக மாறியுள்ளது. காவிரி நீர் ஆணையம் மீது நம்பிக்கை இழந்துள்ளோம்.

காவிரி நீர் மேலாண்மை ஆணையம் கர்நாடகாவின் அறிக்கையை ஏற்றுவிட்டால் அது பிரச்சனையாகிவிடும்.

காவிரி நீர் மேலாண்மை ஆணையத்திற்கு பதிலாக அணை கட்டுவதற்கு எதிராக புதிய ஆணையம் அமைவது அவசியம்.

புதிய ஆணையம் அமைய ஓராண்டு வரை காலம் ஆகும். அடுத்தகட்ட நடவடிக்கைக்கு நமக்கு கொஞ்சம் அவகாசம் கிடைக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.