முதலமைச்சர் விஜய்- அன்புமணிராமதாஸ்
தமிழக செய்திகள்

அப்படி என்ன ஃபிரண்ட்ஷிப்? சூழ்ச்சியில் விழுந்துடாதீங்க: முதலமைச்சர் விஜயை எச்சரிக்கும் அன்புமணி

Back Door பேச்சுவார்த்தை என்ன வென்று எனக்குத் தெரியவில்லை என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் மேகதாது அணை விவகாரம், காவிரியில் கர்நாடகா தண்ணீர் திறந்துவிட மறுப்பது குறித்து பேசினார்.

அப்போது அன்புமணி ராமதாஸ் கூறியதாவது:-

நாளை ராகுல் காந்தி தமிழகம் வருகிறார். அந்தமானில் மத்திய அரசு கொண்டு வர இருக்கும் ஒரு திட்டத்தை அவர் எதிர்க்கிறார். காடுகள் அழிக்கப்பட இருப்பதாக அவர் குற்றம்சாட்டுகிறார்.

அதேபோல்தான் மேகதாது அணை திட்டமும். சுமார் 12 ஆயிரத்து 500 ஏக்கர் காடுகள் அழிக்கப்படும். 12 ஆயிரத்து 500 ஏக்கர் காடுகளை அழித்து அணை கட்ட வேண்டுமா?. அதற்கு நீங்கள் ஒப்புதல் அளிப்பீர்களா? என அவரிடம் கேள்வி எழுப்புங்கள்.

ராகுல் காந்தி சொல்லத் தயாரா?

இந்த ஒரேயொரு கேள்வியை அவரிடம் கேளுங்கள். அந்தமானில் காடுகளை அழிக்கக்கூடாது என்கிறார். அதை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். அதேபோல் மேகதாதுவில் 12 ஆயிரத்து 500 ஏக்கர் காடுகளை அழிக்கக் கூடாது என்று அவர் சொல்வாரா?. சொல்லனும்.

விவசாயக் கடனை முழுமையாக தள்ளுபடி செய்யனும்

முதலமைச்சருக்கு விவசாயிகள் எல்லாரும் சேர்ந்து வாக்களித்தார்கள். விவசாயக் கடன் தள்ளுபடி விவகாரத்தில் அவர்கள் சோர்ந்து போய் உள்ளனர். இன்னும் 15 முதல் 16 ஆயிரம் கோடி ரூபாய் அறிவிச்சா கூட்டுறவு வங்கி கடன்கள் முழுவதும் தள்ளுபடி செய்யப்படும். அதை செய்யனும். அது ஒருபக்கம்.

காவிரி முழுவதும் வறண்ட பகுதியாக இருக்கு. கடந்த ஆண்டு குறுவை சாகுபடிக்காக சுமார் ஆறரை லட்சம் ஏக்கரில் பயிர் செய்யப்பட்டது. இந்த ஆண்டு ஒன்றரை லட்சத்திற்கு மேல் போகுமா? என்று தெரியவில்லை. அடுத்து சம்பா வருது, அதற்கு தண்ணீர் இருக்குமா? என்று தெரியவில்லை.

அப்படி என்ற நமக்கும் கர்நாடகாவுக்கும் பிரண்ட்ஷிப்

இப்போது நமக்கு தண்ணீர் வேண்டும். முறைப்படை, ஒப்பந்தத்தின்படி, உச்சநீதிமன்றம் தீர்ப்பின்படி நமக்கு தண்ணீர் கொடுத்திருக்கனும். கொடுக்கல. அதைக்கூட கேட்கல. அப்படி என்ற நமக்கும் கர்நாடகாவுக்கும் பிரண்ட்ஷிப்.

தற்போது அரிசி விலை 10 ரூபாய் ஏறியிருக்கு. குறுவை சாகுபடி இல்லை என்றால் 30 ரூபாய் ஏறும். இதுபோன்ற மறைமுக பிரச்சினை வரும். இதை முதலமைச்சர் புரிந்து கொள்ளனும். Back Door பேச்சுவார்த்தை என்ன வென்று எனக்குத் தெரியவில்லை.

தேர்தல் வரை டி.கே. சிவக்குமார் விடப்போவது யார்

இவை இரண்டும் வெளிப்படையான பிரச்சினை. வெளிப்படையாக அணுக வேண்டும். முதலமைச்சர் விஜய், கர்நாடகா சென்று தண்ணீர் கேட்டால் கொடுத்து விடுவார்கள் என்று நினைக்கிறாங்க. மேகதாது அணை கட்ட வேண்டாம் என்று சொன்னால் நிறுத்திருவாங்க. அப்படின்னு ஏதோ ஒரு எண்ணத்துல இருக்கிறாரு. எவ்வளவு பேர பார்த்துட்டாங்க. இப்போது இருப்பது டி.கே. சிவக்குமார். அவரது தொகுதியில வருது மேகதாது அணை. அவர் மீண்டும் முதலமைச்சராக வேண்டும் என்று திட்டமிட்டிருக்காரு.

தேர்தல் வரை அவர்கள் விடப்போவது கிடையாது. இன்னும் பிடிவாதமா இருப்பாரு. இன்னும் பதற்றமான சூழ்நிலையை கொண்டு வருவாரு. இதை வைத்துதான் தேர்தலில் வெற்றி திட்டமிட்டுள்ளார். இந்த சூழ்ச்சியில் போய் விஜய் விழக்கூடாது.

இவ்வாறு அன்புமணி தெரிவித்தார்.