தமிழக செய்திகள்

சாதிவாரி கணக்கெடுப்பு: முதலமைச்சர் விஜய்க்கு பொன்குமார் பாராட்டு

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என கோரிக்கை வைத்து வந்தது.

தமிழ்நாடு விவசாயிகள் தொழிலாளர்கள் கட்சி தலைவர் பொன்குமார் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சமூக நீதி நிலத்திட வேண்டுமேயானால் அதற்கு புள்ளி விவரங்கள் அவசியம். குறிப்பாக சாதி வாரியான புள்ளி விவரங்கள் என்பது சமூக நீதியின் முதுகெலும்பாகும்.

தமிழ்நாட்டில் உள்ள பெருவாரியான அரசியல் கட்சிகளும், சமூக அமைப்புகளும் தொடர்ந்து சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என கோரிக்கை வைத்து வந்தது.

இந்த கோரிக்கையை கடந்த 5 ஆண்டு கால தி.மு.க. அரசு ஏற்று நடைமுறைப்படுத்திட முன்வரவில்லை. இந்த நிலையில் தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு விஜய் தலைமையில் புதிய அரசு அமைந்து முதலமைச்சராக அவர் பொறுப்பேற்றுக் கொண்டபின் சமூக நீதி நிலைநாட்டப்படும் என அறிவித்தார்.

அதற்கு ஏற்ப சமூக நீதிக்கு அடித்தளமாக விளங்கக் கூடிய சாதிவாரி கணக்கெடுப்பு தமிழ்நாட்டில் நடத்துவதற்கான ஒப்புதல் அதற்கான தனி ஆணையமும் அமைப்பதற்கான பணிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யை விவசாயிகள் தொழிலாளர்கள் கட்சி மனமார பாராட்டி வரவேற்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT