சமீபத்தில் நடைபெற்று முடிந்த தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில், கொளத்தூர் தொகுதியில் முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை எதிர்த்து போட்டியிட்டிருந்த வி.எஸ்.பாபு வெற்றிப் பெற்றார். இந்த வெற்றியை எதிர்த்து மு.க.ஸ்டாலின் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை இன்று உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்த நிலையில், உச்ச நீதிமன்றத்தில் புதிய வழக்கை தாக்கல் செய்யவுள்ளதாக திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக இன்று செய்தியாளர்களிடம் பேசிய திமுக சட்டத்துறை செயலாளர் என். ஆர். இளங்கோ கூறியதாவது;
“கொளத்தூர் தொகுதிக்கு உட்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பழுதுபட்டுள்ளது தொடர்பாக ஏற்கனவே ஆதரங்களுடன் உச்ச நீதிமன்றத்தில் எடுத்து வைத்தோம். தேர்தல் ஆணையம் மொத்தம் 19 மின்னணு இயந்திரங்களை சரிபார்த்துவிட்டு 14 இயந்திரங்கள் சரியாக இயங்குகின்றன என்று மட்டும் ஒரு அறிக்கையை கொடுத்துள்ளார்கள்.
இதில் ஐந்து இயந்திரங்கள் சரியாக இல்லை என்றால், ஏறக்குறைய 32.33% வாக்குப்பதிவு இயந்திரங்கள் பழுதடைந்திருக்கிறது என்பதை நாங்கள் ஆதாரப்பூர்வமாக நிரூபித்திருக்கிறோம்.
எனவே கொளத்தூர் தொகுதியினுடைய அனைத்து வாக்குப்பதிவு இயந்திரங்களையும் சரி பார்க்க வேண்டும். அந்த விவி பேட்டில் இருக்கக்கூடிய வாக்கு சீட்டுகளை எண்ணி பார்க்க வேண்டும் என்று ஒரு ரிட் மனுவை தாக்கல் செய்தோம்.
இதனுடைய விளைவாக கான்சிகவன்சியல் பிரேயராக எங்களது தலைவர் வெற்றி பெற்றதாக அறிவிக்க வேண்டும் என்று கேட்டிருந்தோம். ஆக இரண்டு பிரேயர்கள் செய்யப்பட்டிருந்தன. வாக்குப்பதிவு இயந்திரங்கள் தொடர்பாக அதிக குற்றச்சாட்டுகள் எழுந்ததால் இந்த வழக்கை தொடுக்க வேண்டும் என கட்சியின் சட்டத்துறைதான் முன்னெடுத்தது.
கட்சித் தலைவரிடம் எடுத்துச் சொல்லி அவருடைய ஒப்புதலை பெற்று நாங்கள் அந்த இயந்திரங்களை சரிபார்த்தோம். அதில் ஐந்து இயந்திரங்கள் குறைபாடு உடையவதாக இருக்கவே உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருக்கிறோம்.
மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்பிரிவு 100ன் படி இந்தெந்த காரணங்களுக்காகத்தான் தேர்தலை தள்ளுப்படி செய்ய வேண்டும் என்று இருக்கிறது. அதில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரியாக இல்லை என்றால், பழுதடைந்திருந்தால் தேர்தலை தள்ளுபடி செய்யலாம் என்ற காரணம் சொல்லப்படவில்லை.
ஏனென்றால் அது 1951ல் இயற்றப்பட்ட சட்டம். மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டதற்கு பிறகு, அந்த சட்டம் திருத்தம் செய்யப்படவில்லை. இரண்டாவதாக அரசியல் அமைப்பு சட்டம், எல்லா தேர்தல் வழக்குகளையும் தேர்தல் மனுவாகத்தான் தாக்கல் செய்ய முடியும் என்று சொல்லி சொல்லியிருக்கிறது.
தேர்தல் மனுவை 45 நாட்களுக்குள்ளாக தாக்கல் செய்ய வேண்டும். கொளத்தூர் தொகுதியை பொறுத்தவரைக்கும் நாங்கள் தேர்தல் முடிவு வந்த மூன்றாவது தினமே அதற்குரிய பணத்தைக்கட்டி தேர்தல் ஆணையத்தில் எங்களுக்கு இந்த 14 இயந்திரங்களை சரிபார்க்க வேண்டும் என கேட்டிருந்தோம்.
ஆனால் தேர்தல் ஆணையம் 45 நாட்களுக்கு பிறகு தான். சொல்லப்போனால் மூன்று மாதங்களுக்கு பிறகுதான் அந்த இயந்திரங்களை எடுத்து பரிசோதனை செய்தார்கள். எனவே தேர்தல் மனுவை ஒரு எதிர்பார்க்கும் நோக்கில் தாக்கல் செய்ய முடியாது.
இதை வைத்துதான் இந்த வழக்கை தேர்தல் மனுவாகத்தான் தாக்கல் செய்திருக்க வேண்டும் என நீதிமன்றம் தெரிவித்தது.
எனவே அது நிலைக்கதக்கது அல்ல. இருப்பினும் கூட அனைத்து வாக்குப்பதிவு இயந்திரங்களையும் சரிபார்ப்பது குறித்து உரிய மனுவை உரிய நீதிமன்றத்தில் தாக்கல் செய்து கொள்ளக்கூடிய அனுமதியை வழங்கி இன்றைக்கு தீர்ப்பளித்திருக்கிறார்கள்.
எனவே இது குறித்து நாங்கள் கட்சித் தலைவரிடம், தலைமைக் கழகத்திடம் எடுத்துச் சொல்லி இதை உச்ச நீதிமன்றத்திற்கு எடுத்துச்செல்ல நாங்கள் கேட்போம். தலைமைக் கழகத்தினுடைய அறிவுறுத்தல் படி நாங்கள் செயல்படுவோம்.” என தெரிவித்துள்ளார்.