தமிழக செய்திகள்

ஓட்டலுக்குள் புகுந்த கார்- பெண் உரிமையாளர் உள்பட 4 பேர் காயம்

விபத்து எப்படி ஏற்பட்டது, காரில் வந்தவர்கள் யார்? என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சாலையில் வந்த கேரள பதிவெண் கொண்ட கார், திடீரென கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. பின்னர் கார் ஓட்டலுக்குள் புகுந்தது. இதனால் ஓட்டலில் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர்.

பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை முக்கோணம் பகுதியில் கீதாமணி (வயது 45) என்பவர் ஓட்டல் நடத்தி வருகிறார்.

கார் புகுந்தது

நேற்று மாலை ஓட்டலில் வழக்கம்போல் பணிகள் நடந்து கொண்டிருந்தது. வாடிக்கையாளர்கள் ஓட்டலில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டு இருந்தனர்.

அப்போது அந்த சாலையில் வந்த கேரள பதிவெண் கொண்ட கார், திடீரென கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. பின்னர் கார் ஓட்டலுக்குள் புகுந்தது. இதனால் ஓட்டலில் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர்.

4 பேர் காயம்

இருந்தாலும் கார் மோதியதில் 4 பேர் காயம் அடைந்தனர். ஓட்டல் உரிமையாளரான கீதாமணி, புரோட்டா மாஸ்டர் ராஜேந்திரன் (60) மற்றும் கண்ணன் (52), வேட்டைக்காரன் புதூரைச் சேர்ந்த காஜாமைதீன் (48) ஆகியோர் காயம் அடைந்தனர். அவர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர்.

காஜாமைதீன் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அவர் தனியார் ஆஸ்பத்திரியில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

போலீசார் விசாரணை

இந்த விபத்து எப்படி ஏற்பட்டது, காரில் வந்தவர்கள் யார்? என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

SCROLL FOR NEXT