சென்னை திரு.வி.க.நகர் தொகுதியில் எம்எல்ஏ பங்கேற்ற பள்ளிக் கட்டட திறப்பு விழாவில் நடைபெற்ற விவகாரம் குறித்து மேயர் பிரியா விளக்கம் அளித்துள்ளார்.
குத்துவிளக்கு ஏற்றுவதற்கு மெழுகுவர்த்தி கொடுக்காததால் எம்எல்ஏ பல்லவி கோபித்துக்கொண்டு சென்றது தொடர்பாக மேயர் பிரியா செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
இது அவ்வளவு பெரிய பிரச்சனை இல்லை. எல்லா மரியாதையும் கொடுக்கப்பட்டது, பிரச்சனை செய்ய வேண்டும் என நினைப்பவர்களை என்ன செய்வது?
முறைப்படி விழாவிற்கு எம்எல்ஏவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது, அவருக்காக காத்திருந்துதான் விழா தொடங்கப்பட்டது.
காலை 8.45 மணி விழாவிற்கு 9 மணிக்குத்தான் எம்எல்ஏ பல்லவி வந்தார், அவருக்காக அனைவரும் காத்திருந்தோம்.
புரோட்டகால்படி தான் எனக்கு அடுத்தபடியாக அதிகாரிக்கு குத்துவிளக்கேற்ற மெழுகுவர்த்தி கொடுத்தேன்.
அடுத்ததாக எம்எல்ஏ குத்துவிளக்கேற்ற கொடுக்கலாம் என இருந்தபோது எம்எல்ஏ பல்லவி ஏதும் பேசாமல் சென்றுவிட்டார்.
பள்ளிக்கட்டிடம் திறப்பு விழாவின்போது எம்எல்ஏ அவராகவே எனக்கு முன்னதாக ரிப்பனை கட் செய்தார்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.