திருச்சி காமராசர் அறிவுலக நூலகத்திற்கான ஆணைகள் உட்பட, இதுவரை வழங்கப்பட்ட அனைத்து புத்தகக் கொள்முதல் ஆணைகளையும் ரத்து செய்வதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.
வெளிப்படையான கொள்முதல் கொள்கையை வகுக்கவும், முறைகேடுகளைத் தடுக்கவும், அறிஞர்கள் மற்றும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள், பதிப்பாளர்கள் சங்கத்துடன் அரசு கலந்தாலோசிக்கும் என்று தெரிவித்துள்ளார்.
சென்னை கன்னிமாரா நூலகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், கோவை பெரியார் அறிவுலக விவகாரம் தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணையைத் தொடங்கியுள்ளதாகவும் தெரிவித்தார்.
கன்னிமாரா நூலகத்தில் மட்டும் 523 போலி புத்தகங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், கோயம்புத்தூரில் உள்ள பெரியார் அறிவுலகத்தில் 3,000-க்கும் மேற்பட்ட செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் புத்தகங்களும் கண்டறியப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு உதவிடும் வகையில், மாநிலம் முழுவதும் உள்ள நூலகங்களில் போலி புத்தகங்களை அடையாளம் கண்டு, அவற்றை பெட்டிகளில் வைத்து சீல் வைக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.
ராஜ்மோகன் செய்தியாளர்களை சந்தித்த அடுத்த சில மணி நேரத்தில், திருச்சி காமராசர் அறிவுலக நூலகத்திற்கான புத்தகங்கள் கொள்முதல் தொடர்பான ஆணைகளை ரத்து செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.